Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்லலாம், ஆனால், சுடக்கூடாது!

ஓசூர் காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்லலாம், ஆனால், சுடக்கூடாது! வனத்துறை அமைச்சர் பொன்முடி, சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்னிலையில் அறிவித்த, அரசாணை, முன்னுக்குப் பின் முரணான, நடைமுறைக்கு ஒவ்வாத, சட்ட திட்டங்களை உள்ளடக்கியுள்ளது என, ஓசூர் உழவர்கள் வேதனை! தமிழ்நாடு, தொழில் வளர்ச்சியில் சிறப்பிடம் பெற்று இருப்பினும், வேளாண்மை என்பது தமிழ்நாட்டின் முதன்மையான அங்கமாக திகழ்கிறது.  விளை நிலங்களை வைத்திருப்பவர்கள், தங்களது நிலங்களைச் சுற்றி, மதில் சுவர் அல்லது முள்வேலி அல்லது மின் வேலி அமைத்து, தங்களது நிலங்களை பாதுகாக்கின்றனர்.  சிறுத்தை, கரடி, உடும்பு, மலைப்பாம்பு, நரி, போன்ற விலங்குகளை, விளை நிலங்கள் வைத்திருப்பவர்கள், தங்களது எதிரிகளாக கருதுவதால், வேட்டையாடி உண்ணும் காட்டு விலங்குகளின் நடமாட்டம் தடைபட்டு, அவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

காடுகளில் வேட்டையாடி உண்ணும் சிறுத்தை, கரடி, உடும்பு, மலைப்பாம்பு மற்றும் நரி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை குறைந்ததால், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  காட்டுப்பன்றிகள், வளர்ப்பு பன்றிகளைப் போன்று, விரைவாக இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டவை.  பெரும்பாலும் அவை காட்டுப்பகுதிகளில் இருப்பினும், உணவிற்காக விளை நிலங்களை நோக்கி படையெடுக்கின்றன. அவை எல்லா வகை பயிர்களையும் உண்ணும் தன்மை கொண்டவை. நம் ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் விளைவிக்கப்படும் அனைத்து வகை பயிர்களையும், விளை நிலங்களில் புகுந்து நாசம் செய்கின்றன. நம் பகுதி உழவர்களும், பொதுமக்களும், வேட்டையாடி உண்ணும் விலங்குகளை அப்புறப்படுத்தியதால், சுற்றுச்சூழல் வட்ட அமைப்பை சிதைத்து விட்டு, காட்டுப்பன்றிகள் எண்ணிக்கை உயர்வு குறித்து, சட்ட உதவி வேண்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த முறையான சட்டம் கொண்டுவர வேண்டும் என உழவர்களின் தொடர் கோரிக்கையை முன்னிட்டு, கடந்த ஒன்பதாம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில், அரசாணை வெளியிடப்பட்டது.  அந்த அரசாணை காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்வதற்கு அனுமதி வழங்குகிறது.  ஆனால், காட்டுப்பகுதியில் இருந்து, ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை, பன்றிகளை சுட்டுக் கொல்ல அனுமதி இல்லை.  அடுத்த மூன்று கிலோமீட்டர் வரை, பன்றிகளை சுட்டுக் கொல்லக் கூடாது.  அதற்கு பதில் அவற்றை, உயிருடன் பிடித்து, காட்டுக்குள் விட வேண்டும் போன்ற ஏராளமான கட்டுப்பாடுகள் இருப்பதால், அரசாணை, எவ்விதத்திலும் தங்களுக்கு பயன்தரப் போவதில்லை என உழவர்கள் வேதனை தெரிவித்தனர். உழவரின் பார்வையில், சட்டம் என்ன சொல்கிறது, அவர்கள் கோரிக்கை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: