Hosur News, ஓசூர் செய்திகள் - அலிகள் மீது கொண்ட மோகத்தால் இரு பிள்ளைகளை தவிக்கு விட்டு ஓசூருக்கு வந்தவர்

டிக் டாக் செயலி பலரின் வாழ்வை கெடுப்பதாக சொன்னாலும், அதன் மீதுள்ள ஆர்வத்தால் பல குற்றவாளிகள் அதில் தம் முகம் தெரிய பதிவிடுவதால் தாமாகவே காவலர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.

மூன்றாண்டுகளுக்கு முன், வீட்டில் இருந்து வெளியேறியவரை, டிக் டாக் காணொளி மூலம், காவலகள் கண்டுபிடித்து, அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர்.

விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர், செயப்பிரதா, 26. இவருக்கும், கிருட்டிணகிரி பகுதியை சேர்ந்த, சுரேஷ், 33, என்பவருக்கும், 2013ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு, இரு மகள்கள் உள்ளனர். சுரேஷ், விழுப்புரத்தில், பானிபூரி கடை நடத்தி வந்தார்.கடந்த, 2016ல், திடீரென, சுரேஷ் வீட்டில் இருந்து காணாமல் போனார்.

உற்றார் உரவினர் வீடுகள் என பல இடங்களில் தேடிப் பார்த்தும் கணவர் கிடைக்காததால், 2017ல், விழுப்புரம் வட்டார காவல் நிலையத்தில், ஜெயப்பிரதா கணவரை காணவில்லை என புகார் அளித்தார்.

இந்நிலையில், ஒரு கிழமைக்கு (வாரத்திற்கு) முன், டிக் டாக் செயலியில், சுரேஷ் இருக்கும், காணொளி வெளியானது.

அதில் சுரேஷ், திருநங்கை ஒருவரோடு, ஆடல், பாடல் என, உற்சாகமாக இருக்கும் காட்சியய் பார்த்த உறவினர்கள், ஜெயப்பிரதாவிடம் காண்பித்து உள்ளனர்.

ஜெயப்பிரதா, அந்த காணோளி குறித்து, விழுப்புரம் வட்டார காவலர்களிடம் கூறினார்.

காவலர்கள், விழுப்புரத்தில் உள்ள, திருநங்கையர் கூட்டமைப்பை சேர்ந்தோரிடம் விசாரித்தனர்.

அதில், காணோளியில் உள்ள திருநங்கை, ஓசூரை சேர்ந்தவர் என தெரிந்தது. இதையடுத்து காவலகள் குழு, ஓசூர் சென்று, சுரேஷை அழைத்து விழுப்புரம் வந்தனர்.

விசாரணையில் குடும்பத்தை தவிக்க விட்டு ஓடிய சுரேஷ் ஓசூரில் உள்ள டிராக்டர் நிறுவனத்தில், மெக்கானிக்காக பணியாற்றி உள்ளார்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த, திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து, வாழ்ந்து வந்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சுரேசுக்கு தெரியாமலேயே, அந்த திருநங்கை, டிக் டாக் செயலி மூலம் காணோளி எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

காவலர்கள், கடந்த நாளுக்கு முந்தைய நாள் இரவு, சுரேசிற்கு அறிவுரைக் கூறி, அவரது மனைவி ஜெயப்பிரதாவுடன், வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: