இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் சார்பில், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.
இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் சார்பில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு வாரம் கடைப்பிடித்து, அதை ஒவ்வொரு நிகழ்ச்சிகளாக நடத்தி வருகின்றனர். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மாணவர்களின் நலன் கருதி, மாணவர்களுக்கான சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அதன்படி அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில், அங்கு பயிலும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த நிகழ்வில், சாலை போக்குவரத்து அலுவலர் முத்துசாமி மற்றும் சாலை பாதுகாப்பு ரோந்து துறையின் அலுவலர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு நிகழ்வுகளை நடத்தினர்.
சாலை பாதுகாப்பை எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்து, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். சாலை போக்குவரத்து சட்ட திட்டங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து குறியீடுகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதற்கான விளக்கங்களை, சாலைப் போக்குவரத்து கருவிகளைக் பயன்படுத்தி மாணவர்களுக்கு விளக்கினார்கள்.
இந்த நிகழ்வில், அரசு தொழில்துறை பயிற்சி நடுவத்தை சேர்ந்த இருநூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.








