Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 17 June 2025

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வரும் ஜூன் 21 ஆம் நாள் முதல் கிருஷ்ணகிரி மாவட்ட மாங்கனி கண்காட்சி துவங்குகிறது.

மாங்காய்க்கு சரியான விலை கிடைக்காததால், சாலை ஓரங்களில் மாங்காய்களை வீசி செல்லும் உழவர்கள். 

ஓசூர் ராயக்கோட்டை சாலையில், அசோகா தூண் சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து கம்பம், வேகமான காற்றினால் சாலையில் சரிந்தது.  அது விழும் நேரத்தில் போக்குவரத்து இல்லாததால், யாருக்கும் பாதிப்பு இல்லை.  சற்று நேரத்தில் கம்பம் அங்கிருந்து அகற்றப்பட்டது. 

ஓசூர் ராயக்கோட்டை சாலை அருகே அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு உயர் அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டதால், வீடுகளில் இயங்கிக் கொண்டிருந்த மின் பொருட்கள் சேதம் அடைந்தன. 

ஓசூரில், உள் வட்டச் சாலை, ஏ.எஸ்.டி.சி. அட்கோ 100 அடி சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில், இரு சக்கர வண்டிகளில் இளைஞர்கள் சாகசம் செய்வது, அப்பகுதியில் பயணிப்பவர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள். 

தேன்கனிக்கோட்டை அருகே, பி.ஜி. தொட்டி ஊரில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் தேவதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், தேன்கனிக்கோட்டையில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், கூட்டம் நடைபெற்றது. 

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 -வது வார்டு  வெங்கடேஷ் நகர் பகுதியில் இயங்கி வரும் எரிவாயு தகன மேடையினை மாநகர மேயர் S.A. சத்யா நேரில்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: