புதிய வரலாற்றை ஏற்படுத்திய டிரம்ப்-கிம் சந்திப்பு!

புதிய வரலாற்றை ஏற்படுத்திய டிரம்ப்-கிம் சந்திப்பு!

புதிய வரலாற்றை ஏற்படுத்திய டிரம்ப்-கிம் சந்திப்பு!

ஜி 20 மாநாடு முடிந்து அமெரிக்கா திரும்பிக் கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப் வழியில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை அவரது நாட்டினுள் சென்று திடீரென சந்தித்து பேசினார்.

இருவரும்  தென்கொரியா-வடகொரியா போருக்கு பின்னர் அமைதிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பன்-முன்-ஜோம் நகரில் சந்தித்து கொண்டனர்.

இந்த பகுதி ராணுவமற்ற பகுதி என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்க தலைவராக இருக்கும் ஒருவர் வடகொரிய நாட்டுக்குள் சென்றது இதுவே முதன் முறை.

இதற்கு முன்பு இருவரும் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் தலைநகர் அனாய் ஆகிய இடங்களில் சந்தித்து கொண்டனர்.

இதன் பிறகு இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் 2 கிழமைகளுக்கு (வாரங்கள்) பிறகு சந்தித்துப் பேச உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

வடகொரிய எல்லைக்குள் சென்ற முதல் அமெரிக்க தலைவர் என்ற பெருமையை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: