Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 24 June 2025 | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Daily Podcast – Weather, Panchangam, Astrology & News | 24 June 2025

📅 வெளியீடு நாள்: 24-06-2025

📄 விளக்கம்

நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 9230. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 120.

ஓசூர் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், இதற்கு முன் நாகர்கோயில் மாநகராட்சியின் ஆணையராக பதவி வகித்து வந்தார். இவர் ஏற்கனவே ஓசூரில் சாராட்சியராக பணியாற்றியுள்ளார்.

பாலம் உடைந்ததால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையின் திட்டமிட்ட முயற்சிகளால், பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கையாளப்பட்டு வருகிறது.

உளியாளம் ஊரில், ஊர் தேவதைகளுக்கான விழா கொண்டாடப்பட்டது.

கெலமங்கலம் அருகே தொட்டபேளூர் ஊரைச் சேர்ந்த சம்பங்கிராமையா, 20 ஆண்டுகளாக காளை ஒன்றை வளர்த்து வருகிறார். அதன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஊர் மக்கள் ஒன்று கூடி, காளையை அலங்கரித்து, கேக் வெட்டிக் கொண்டாடினர்.

ஓசூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையே கிருஷ்ணகிரியில் அக்கட்சியின் துண்டை அணிந்து கத்தியுடன் வலம் வந்த நபர் கட்சியைச் சார்ந்தவர் அல்ல என்றும், போலியாக திட்டமிட்டு வெளியாள் ஒருவர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேன்கனிக்கோட்டை தாவர கரை பகுதியில் மாலை 5 மணி அளவில் ஒற்றை யானை ஒன்று ஊருக்குள் புகுந்து சுற்றி திரிந்தது. வனத்துறையினர் அதை விரட்டி விட்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads