Hosur Daily News 22 June '25 HosurWeather, HosurNews, HosurOnline, HosurGoldPrice, HosurPanchangam | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Hosur Daily News 22 June '25 HosurWeather, HosurNews, HosurOnline, HosurGoldPrice, HosurPanchangam

📅 வெளியீடு நாள்: 22-06-2025

📄 விளக்கம்

நேற்று தங்கம் இருபத்தி இரண்டு கேரட், ஒரு கிராம் விலை ரூபாய் 9235. வெள்ளி ஒரு கிராம் விலை ரூபாய் 120.
ஓசூர் பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள பாலத்தில், முறையான மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படாததால், பாலத்தின் ஒரு பலகை தூணில் இருந்து விலகி, கீழே விழும் நிலையில் உள்ளது. அச்சுறுத்தல் எதுவும் இல்லை என, தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஓசூர். சூளகிரி மற்றும் பெங்களூரு பகுதியில் இருந்து ஓசூரை கடந்து செல்லும் கனரக வண்டிகளை, மாற்று பாதையில் பயணிக்க மாவட்ட ஆட்சியர் ஆணை.

ஓசூர் ராமநாயக்கன் ஏரியா அருகே அமைந்துள்ள நடைப்பயிற்சி மற்றும் சிறுவர் பூங்கா முறையாக கவனிக்கப்படாததால், பாழடைந்த நிலையில் உள்ளது. கழிவறைகள் தண்ணீரின்றி மலக்கழிவு நாற்றத்துடன் நோய் பரப்பி வருகின்றன. இந்த பூங்கா ஓசூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பல்வேறு மருத்துவமனைகள் அமைந்துள்ள தேன்கனிக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை அருகே, கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படாததால், நோயாளிகள் மருத்துவமனைகளை அணுகுவது இடர்பாடு தொடர்கிறது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் கோளாறு மாவட்டம் மாலூர் கங்கம்மா கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன் குமார். இவர் கடந்த நாள் காய்கறி மொத்தமாக வாங்குவதற்காக பாகலூர் வந்துள்ளார். வங்கி ஏடிஎம்மில் ரூபாய் நான்காயிரம் எடுத்துள்ளார். 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இந்தி பேசும் இளைஞர்கள் ஏடிஎம் னுள் இவர் பணம் எடுப்பதை கூர்ந்து கவனித்து வந்துள்ளனர். இதனிடையே ஏடிஎம் அட்டையை பிடுங்கி இளைஞர் ஒருவர், மாற்று ஏடிஎம் அட்டையை இவரிடம் கொடுத்துள்ளார். நவீன் குமார் கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் திரண்டு, ஒரு இளைஞரை பிடித்து விட்டனர். மற்றவர் தப்பிவிட்டார். பிடிபட்டவர் பெயர் பிரின்ஸ் என்றும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவரிடமிருந்து சுமார் 60 ஏ டி எம் அட்டைகளை பாகலூர் காவல் நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த நாள் முதல் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே அனைத்திந்திய மாங்கனி கண்காட்சி துவங்கியது.

சூளகிரி அடுத்த சிகரளபள்ளி ஊரில் பி அண்ட் பி தொழிற்சாலை சார்பில், நிறுவனம் சமூகத்திற்கு பொறுப்பு CSR பணத்தில், 53 பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, அக்கட்சியினர் கடந்த நாள் ஓசூரில் மராத்தான் ஓட்டம் நடத்தினர்.

கடந்த நாள் திருச்சி சிவா ஓசூருக்கு வருகை புரிந்தார்.

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் அசோக் பில்லர் அருகே ராஜேஷ் கண்ணன் என்பவர் நடத்திவரும் பேக்கரி கடைக்குள் ஐந்து அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று நுழைந்து பரபரப்பு ஏற்படுத்தியது.

ஓசூரில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் வேலூர் நாராயணி பொற்கோவிலில் வைபவ நாராயணி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads