⚡ Transformer Theft Gang Busted Near Denkanikottai | 100 Kg Copper Seized | 5 Arrested! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

⚡ Transformer Theft Gang Busted Near Denkanikottai | 100 Kg Copper Seized | 5 Arrested!

📅 வெளியீடு நாள்: 05-10-2025

📄 விளக்கம்

🚨 Massive transformer theft racket cracked near Denkanikottai! Under the supervision of DSP Anandaraj and Inspector Ganesh Kumar, police arrested five criminals involved in a transformer copper theft ring.

🔌 Seized items include:

100 Kg of stolen copper

2 two-wheelers used in the crime

💰 Reports suggest over ₹10 crore annual losses to TANGEDCO due to such thefts.
Public demand strict action — even “encounter-style” punishments — to stop these crimes once and for all.

#Denkanikottai #Hosur #Krishnagiri #CopperTheft #TNEB #TransformerTheft #TamilNaduPolice #CrimeNews #HosurOnline

தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்தில், டிரான்ஸ்பார்மர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஐந்து குற்றவாளிகளை, தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மேற்பார்வையில், தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தலைமை காவலர் ரஞ்சித் குமார் ஆகியோர், தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு கைது செய்தனர்.

ஐந்து நபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 100 கிலோ செம்பு மற்றும் இரண்டு இரு சக்கர வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

திருட்டு தங்க நகைகள் எவ்வாறு மீட்கப்படுகின்றனவோ, அவ்வாறு மின்மாற்றி திருடர்கள் யாரிடம் செம்பை விற்றனர் என்பதை கண்டறிந்து, திருட்டு செம்பை வாங்கியவர்களிடமிருந்து முழுமையாக இழப்பீடுகளை பெற வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், திருட்டுச் செம்பு வாங்கியவர்களில் ஒருவர் மீது என்கவுண்டர் போன்ற நடவடிக்கை எடுத்தால் இந்த குற்றங்கள் தொடராமல் இருப்பதற்கு வாய்ப்பாக அமையும் என கருத்து தெரிவித்தனர்.

மின்மாற்றிகளை உடைத்து, செம்பு திருடுவதற்கு மூளையாக செயல்பட்டது, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சம்மனள்ளி ஊரைச் சேர்ந்த 28 வயதுடைய பழனி மற்றும் அவரது தம்பி சேகர் என தெரியவந்தது. இவர்களுடன் மேலும் பலர் கூட்டாக செயல்பட்டதும் கண்டறியப்பட்டது.

கடந்த ஆண்டுகளில், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 60 மின் மாற்றிகள் உடைத்து, அவற்றிலிருந்து சுமார் 3000 கிலோ செம்பு மற்றும் விலை மதிப்புமிக்க எண்ணெய் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. மின்வாரியத்திற்கு ஆண்டொன்றுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை திருட்டினால் இழப்பு ஏற்பட்டது என கூறப்படுகிறது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads