Kodakarai Tribal Village Near Hosur Awaits Bus Service Despite Preparations | Hosur News Update - Video
Kodakarai Tribal Village Near Hosur Awaits Bus Service Despite Preparations
📅 வெளியீடு நாள்: 30-06-2026
📄 விளக்கம்
Residents of Kodakarai, a tribal village near Hosur, have appealed for the commencement of a bus service, stating that preparations including a suitable vehicle and approvals are already in place.
Kodakarai, a tribal village located in the hill region near Hosur, continues to remain without bus connectivity.
According to local residents, experts assessed the steep mountain road and recommended operating a smaller bus on the route. They say a suitable vehicle has been kept ready, approvals have been granted, and experienced drivers are available. The community has appealed to District Collector Dinesh Kumar to help facilitate the commencement of the bus service.
ஓசூர் அருகே, நாடு விடுதலை அடைந்து சுமார் 80 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும், மலைவாழ் பழங்குடியின மக்கள் வாழும் கொடகரை ஊருக்கு இன்னும் பேருந்து போக்குவரத்து இல்லை. செங்குத்தான மலைப்பாதை, அச்சுறுத்தும் கொண்டை ஊசி வளைவுகள் என்பதால், இந்தச் சாலையில் பேருந்து இயக்குவது குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அடிப்படையில், சிறிய வகை பேருந்தை இயக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களின் முயற்சியால் இந்த வழித்தடத்திற்கான சிறிய வகை பேருந்து, ஆயத்தமாக உள்ளது. பேருந்தை இயக்க அரசின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய மலைப்பாதைகளில் பேருந்து இயக்கிய அனுபவம் கொண்ட ஓட்டுநர்களும் உள்ளனர். இருப்பினும், கொடகரைக்கு பேருந்து இயக்கப்படாமல், பெட்டமுகிலாளத்தில் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனிகவனம் செலுத்தி, பேருந்த இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். Please give me platform specific content








