Once Ignored Kodukkappuli Now Fetches ₹400 per Kg in Hosur | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

Once Ignored Kodukkappuli Now Fetches ₹400 per Kg in Hosur

📅 வெளியீடு நாள்: 03-02-2026

📄 விளக்கம்

Kodikkappuli, a wild fruit that was once commonly found along roadsides in and around Hosur, is now being sold at ₹400 per kg. Due to the disappearance of local trees, the produce is being sourced from Tenkasi district and sold in Hosur. Agriculture experts say Hosur farmers could increase income by cultivating such low-investment cash crops and exploring domestic and export markets.

ஓசூரில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கொடுக்காப்புளி, இப்போது கிலோ 400 ரூபாய்க்கு இதே ஓசூரில்.

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி சாலை ஓரங்களில், முன்பு ஏராளமான கொடுக்காப்புளி மரங்களை நாம் காண இயலும். இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுப்படுத்தப்படாத வெள்ளாடு வளர்ப்பின் பயனாக, சாலையோர கொடிக்காப்புளி மரங்கள், ஆடுகளின் புழுக்கையாக மாறிவிட்ட நிலையில், தென்காசி மாவட்டத்திலிருந்து கொடுக்காப்புளி கொண்டுவரப்பட்டு, ஓசூரில் கிலோ 400 ரூபாய்க்கு சாலை ஓரங்களில் விற்கப்பட்டு வருகிறது.

ஓசூர் பகுதிகளில் தக்காளி, முள்ளங்கி போன்ற விளைபொருள் உற்பத்தி சிறந்து விளங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் தக்காளி விலையை பார்த்தோமானால், பெரும்பாலான நாட்களில் 20 ரூபாய் வரை விலை உள்ளது.

ஓசூர் பகுதி உழவர்கள், கொடிக்காப்புளி போன்ற, பெரிய அளவில் செலவும், மனித உழைப்பும் தேவையில்லாத பணப்பயிர்கள் விளைவித்து, பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளைத் தேடினால், பெருமளவு வருவாய் பெருகும் என வேளாண் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads