Hosur Youth Raises Concern After Receiving Unexpected Bank SMS Alerts | Hosur News Update - Video
Hosur Youth Raises Concern After Receiving Unexpected Bank SMS Alerts
📅 வெளியீடு நாள்: 03-02-2026
📄 விளக்கம்
A youth from Hosur reported receiving unexpected SMS alerts related to bank transactions for an account he says he is not connected to. After contacting the bank, an explanation was provided that the alerts may be linked to phone numbers used in loan-related records. Social activists have emphasized the need for greater public awareness regarding the sharing of phone numbers and personal identity details.
ஓசூர் இளைஞர் அதிர்ச்சி. எங்கள் நடைமுறையே இப்படித்தான் என வங்கி மேலாளர் அசால்ட் பதில்.
ஓசூர் இளைஞருக்கு, அவருக்கு தொடர்பே இல்லாத ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாகவும், சற்று நேரத்தில் பணம் எடுத்ததாகவும் தொடர்ச்சியாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன.
அதிர்ச்சி அடைந்த அவர், குறுஞ்செய்தி அனுப்பிய "தமிழ்நாடு கிராம வங்கியின்" மேலாளரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு துவங்கும் பொழுது யாருடைய தொலைபேசி எண்ணை வேண்டுமானாலும் கொடுத்து துவங்கலாம். அத்தகைய நபர்கள், கடன் பெற்று திரும்ப செலுத்தாத நிலையில், கடன் வசூலிப்பதற்கு அவர் கொடுத்த எண்ணைத்தான் தொடர்பு கொள்வோம். தகவல் சரிபார்ப்புகள், நடைமுறையில் முழுமையாக பின்பற்றப்படுவது இல்லை என தெரிவித்தது, ஓசூர் ஆன்லைன் சார்பில் தகவல் சேகரிக்கச் சென்ற நமக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.
எச்சரிக்கை ஓசூர் மக்களே… உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஆவணங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் கவனமாக இருங்கள்.








