கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணாக்கர்கள், நீட், IIT - JEE தேர்வுகளில் அசத்தல்! 💥📚🔥 #NoChillKrishnagiri | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல்

கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணாக்கர்கள், நீட், IIT - JEE தேர்வுகளில் அசத்தல்! 💥📚🔥 #NoChillKrishnagiri

📅 வெளியீடு நாள்: 08-09-2025

📄 விளக்கம்

This year, 15 students from government schools in Krishnagiri district secured MBBS admissions under the 7.5% reservation quota for government school students.

A standout among them is 18-year-old Satheesh Kumar, who lost his father at a young age and was raised by his mother and relatives. He secured 2nd rank at the state level in the quota category.

Of the 15 achievers:

7 are from Krishnagiri Government Model School

4 from Kunnathur Govt School (Mathur region)

1 each from Hosur RV Boys Hr Sec School, Rayakottai, Pavakkal, and Urapam government schools

13 students got into government medical colleges, and 2 into private colleges – proving talent thrives even without privilege.

கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணாக்கர்கள், நீட், IIT-JEE போன்ற, போட்டித் தேர்வுகளில் அசத்தல்!

ஓசூர் அரசு ஆர். வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர், மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார்!

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பதினைந்து மாணாக்கர்கள், மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்து, சாதனை புரிந்துள்ளனர்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாய் மற்றும் உறவினர் அரவணைப்பில் வளர்ந்த பதினெட்டு வயதுடைய சதீஷ்குமார், மாநில அளவில், அரசு பள்ளி இட ஒதுக்கீட்டில், இரண்டாம் இடம் பிடித்து, சாதனை புரிந்துள்ளார்.

பதினைந்து மாணாக்கர்களில், ஏழு பேர் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மாதிரி பள்ளியைச் சார்ந்தவர்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் நான்கு பேரும், ஓசூர் ஆர். வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவரும், ராயக்கோட்டை, பாவக்கல் மற்றும் உறப்பம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற தலா ஒரு மாணாக்கரும் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களில் பதிமூன்று பேர், அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டு பேர் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads