Drainage Dispute in Thulir Nagar Area of Hosur Escalates; Residents Submit Petition | Hosur News Update - Video
Drainage Dispute in Thulir Nagar Area of Hosur Escalates; Residents Submit Petition
📅 வெளியீடு நாள்: 10-02-2026
📄 விளக்கம்
A drainage-related dispute has escalated in Thulir Nagar near Mathigiri in Hosur after land ownership claims disrupted sewage line work. Residents say official intervention has complicated the issue further. On Tuesday evening, over 100 residents submitted a petition requesting authorities to resolve the matter through proper administrative procedures.
ஓசூர் மாநகராட்சி இரண்டு பேர் வாய்க்கால் தகராறில், மூன்றாவது ஆழையும் இணைத்து, சிறிய பிரச்சனைக்கு தீர்வு காணாமல், சிக்கலை பெரிதாக்கி சாதனை!.
ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் அருகே, அரசு அனுமதி உடன் அமைந்த குடியிருப்பு பகுதி, "துளிர் நகர்". மாநகராட்சி ஒப்புதலுடன், சாலை வழித்தடமாக இருந்த ஒரு பகுதியை, ஒரு பிரிவினர் தங்களது இடம் என கோரிக்கை விடுத்த நிலையில், துளிர் நகர் பகுதியில் இருந்து கழிவு நீர் வடிகாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக பிரச்சனைக்குரிய இரு குடியிருப்புகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் ஓசூர் வட்டாட்சியர் தலையிட்டு, டைட்டான் டவுன்ஷிப்பையும் இதில் இணைத்து, தீர்வு எட்டுவதற்கு பதிலாக, சிக்கலை மேலும் இடியாப்ப சிக்கலாக மாற்றியதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, கடந்த நாள் மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பகுதி மக்கள், சாராட்சியார் அலுவலகத்தில், அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பின் தலைவர் துரை அவர்கள் தலைமையில் சார் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்திருந்தனர். அவர் அலுவலகத்தில் இல்லாததால், ஓசூர் வட்டாட்சியரிடம், சிக்கலை முறைப்படி தீர்த்து வைக்கும் படி கோரிக்கை மனு வழங்கினர்.








