Kottai Mariamman Temple Festival Begins in Hosur with Flag Hoisting | Hosur News Update - Video
Kottai Mariamman Temple Festival Begins in Hosur with Flag Hoisting
📅 வெளியீடு நாள்: 22-04-2026
📄 விளக்கம்
The annual festival of the historic Kottai Mariamman Temple in Hosur commenced with the flag hoisting and Kaappu Kattudhal ceremony.
The event witnessed participation from devotees and public representatives, including Krishnagiri MP K. Gopinath and Hosur MLA candidate and Mayor S.A. Sathya.
Various rituals, including traditional offerings and processions, were performed as part of the festival.
Upcoming events include Maavilakku festival, Kavadi rituals, fire walking, and other traditional celebrations scheduled in the coming days.
ஓசூர் திருவிழாக்களில் இரண்டு திருவிழாக்கள் புகழ் பெற்றது. முதலாவது மலைக்கோவில் திருவிழா. அடுத்ததாக கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா. கடந்த நாள் காலை 10:30 மணியளவில் பழமையான சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலரும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிநாத் கலந்து கொண்டு வழிபாடுகள் மேற்கொண்டார். ஓசூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், ஓசூர் மேயருமான எஸ் ஏ சத்யா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டார். கோவிலின் முன்புறவளாகத்தில் ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடி கம்பம் அருகே அம்மன் எழுந்தருளி, கோவிலை மூன்று முறை வலம் வந்து நம்பிக்கையாளர்களுக்கு அருள் வழங்கினார். மாலை 5 மணிக்கு துவங்கிய, அம்மனுக்கான பால் குடமுழுக்கு நிகழ்வு இரவு வரை தொடர்ந்தது. வருகிற மே ஐந்தாம் நாள், மாவிளக்கு திருவிழா நடைபெற உள்ளது. அன்றைய நாளில், காப்புக் கட்டி விரதம் இருந்தவர்கள் பல்வேறு விதமான காவடிகள் எடுத்து, தங்கள் விரதத்தை நிறைவு செய்வர். தொடர்ந்து மே ஆறாம் நாள் பூ மிதித்தல், சிடி உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடைபெறும்.








