Devotees Perform Traditional Rituals at Hosur Mariamman Festival | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Devotees Perform Traditional Rituals at Hosur Mariamman Festival

📅 வெளியீடு நாள்: 05-05-2026

📄 விளக்கம்

Devotees in Hosur participated in traditional rituals, including body piercing and vow fulfillment practices, during the Kottai Mariamman Temple festival.

The rituals, followed for decades, reflect faith and gratitude. Large crowds took part, and safety arrangements were made by police and traffic wardens.

ஓசூரில் அந்தரத்தில் தொங்கி நேர்த்திக்கடன் செலுத்திய நம்பிக்கையாளர்கள்!

ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள், காப்பு கட்டி, விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

பல பதின்ம ஆண்டுகளுக்கு முன்பு, டெங்கு, காலரா போன்ற நோய்களிலிருந்து காத்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுவதாக வரலாறு அறிந்த பெரியவர்கள் கூறுகின்றனர்.

60 அடி அகலம் கொண்ட அலகு குத்தி, பலர் ஊர்வலமாக வந்தனர்.

மேலும், பெண்கள், பால் குடம், பூக்குடம் சுமந்து வந்தனர்.

இளைஞர்கள் பறக்கும் காவடியில் அலகு குத்தி, கிரேன்களில் அந்தரத்தில் தொங்கியவாறு வந்தனர்.

சேலை கட்டி அம்மன் வேடமிட்ட ஆண்கள் மேள-தாளங்கள் முழங்க ஆடியபடி ஊர்வலமாக வந்தனர்.

கோவில் முன்புறம் ஏராளமான ஆடு, கோழி பலியிடப்பட்டது.

ஏராளமான காவல்துறையினர், அவர்களுக்கு உறுதுணையாக Traffic Wardanகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads