Hosur Highway or a Prison? Hosur National Highway Turns Into Traffic Nightmare Amid Flyover Works! | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Hosur Highway or a Prison? Hosur National Highway Turns Into Traffic Nightmare Amid Flyover Works!

📅 வெளியீடு நாள்: 14-05-2026

📄 விளக்கம்

Severe traffic congestion crippled the Hosur National Highway from the bus stand to Adhiyamaan College, with vehicles reportedly stranded for more than five hours.

Residents and commuters allege that inadequate planning and the absence of proper diversion arrangements during ongoing flyover construction for the new suburban bus terminal have worsened the situation.

Despite earlier warnings from industrial bodies and volunteers regarding possible traffic chaos, commuters say alternative traffic management measures were not effectively implemented.

Daily commuters now describe the stretch as a “traffic disaster zone” and are urging authorities to take immediate corrective action.

சிறைச்சாலையாக மாறிய ஓசூர் தேசிய நெடுஞ்சாலை… முறையாக திட்டமிடாத மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் பரிசா?.

இன்று காலை 5 மணி முதல், ஓசூர் பேருந்து நிலையம் முதல் அதியமான் கல்லூரி வரை 4 கிலோமீட்டருக்கும் கூடுதலாக சாலை போக்குவரத்து முடங்கி, ஆயிரக்கணக்கான வண்டிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிப்பு.

எதனால் இத்தகைய சாலைப் போக்குவரத்து நெருக்கடி? முறையான திட்டமிடல் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி துவக்கம்.

புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கான மேம்பால பணி துவங்கும் முன்பே, “கடுமையான போக்குவரத்து நெரிசல் வரும்” என்று தொழிற்சங்கங்கள், தன்னார்வலர்கள் எச்சரித்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்களும் நடந்தது.

ஆனால், திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே அறிவிப்பு. மாற்றுச் சாலை இல்லை… மாற்று போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை…

இப்போது ஒவ்வொரு நாளும் ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பேரிடர் சாலையாக விளங்குகிறது.

“இப்போதாவது இதற்கு பொறுப்பானவர்கள் விழிப்பார்களா?” என்று மக்கள் வேதனை.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads