Youth Dies in Abandoned Quarry Near Denkanikottai | Hosur News Update - Video
Youth Dies in Abandoned Quarry Near Denkanikottai
📅 வெளியீடு நாள்: 14-05-2026
📄 விளக்கம்
A young man reportedly drowned in an abandoned granite quarry near Denkanikottai in the Hosur region.
Residents have alleged that the quarry lacked proper safety barriers and staged a protest demanding preventive measures and support for the victim’s family.
ஓசூர் அருகே கிரானைட் குவாரி முறையாக மூடப்படாததால், இளைஞர் மரணம் என ஊர் மக்கள் குற்றச்சாட்டு.
தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுகோட்டை பகுதியில் சுமார் 10 ஆண்டுகளாக இயங்காமல் கைவிடப்பட்ட மகேந்திரா கிரானைட் கல்குவாரியில், மேலூரைச் சேர்ந்த 30 வயது ராஜேஷ் குமார் என்பவர் தன் நண்பர்களுடன் குளிக்கச் சென்றாராம். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.
அவருக்கு 25 வயது மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை இருப்பதாகவும், குவாரி உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முறையாக தடுப்புச் சுவர் மற்றும் வேலி அமைத்து, இதுபோன்ற நிகழ்வு நடக்காத படி தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.








