HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Three Arrested in Fake Gold Scam Near Hosur

Published: 26-05-2026  ·  HosurOnline

விளக்கம்

Police arrested three persons in connection with an alleged fake gold scam near Hosur involving a ₹18 lakh transaction.

Investigators stated that the accused allegedly convinced the buyer by first providing a genuine gold sample before selling fake material claimed to be treasure gold.

The case is under investigation by Nallur police.

ஓசூரில் 2 கிலோ தங்கம்… வெறும் 18 லட்சம் ரூபாய்க்கு விற்பனை?

ஊத்தங்கரை பகுதியில் வாழும் 22 வயது அசோக், தமக்கு “தங்கப் புதையல் கிடைத்துள்ளது” என கூறி, குறைந்த விலைக்கு விற்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து, ராஜ்குமார் மூலம் தகவல் அறிந்த காரைக்குடியைச் சேர்ந்த சேது முத்துராமலிங்கம், தங்கத்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

முதலில், ஒரு கிராம் “sample” தங்கம் கொடுக்கப்பட்ட நிலையில், அது உண்மையான தங்கம் என உறுதி செய்யப்பட்டதாக தகவல்.

இதை நம்பி, ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில், 18 லட்ச ரூபாய் கொடுத்து 2 கிலோ பொருளை அசோக்கிடமிருந்து முத்துராமலிங்கம் வாங்கியுள்ளார்.

பின்னர், அவை அனைத்தும் போலி என்பது தெரிய வந்ததை தொடர்ந்து, ஓசூர் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மோசடியில் ஈடுபட்டதாக அசோக், பிரசாத், பிரபு ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பகிர்: WhatsApp X Facebook Threads