Looking for a Sunday Food Trip? Try This Country Chicken Restaurant Near Thally | Hosur News Update - Video
Looking for a Sunday Food Trip? Try This Country Chicken Restaurant Near Thally
📅 வெளியீடு நாள்: 31-05-2026
📄 விளக்கம்
SS Naati Rusi Manai near Thally Lake offers country chicken biryani, grills, curries and wood-fire cooked specialties, making it a great Sunday lunch destination from Hosur.
ஓசூர் மக்களுக்கு ஒரு சூப்பர் சண்டே ஐடியா!
சாப்பாட்டுக்காக மட்டும் பயணம் செய்ய தயாரா? அப்படின்னா இந்த இடம் உங்களுக்காகத்தான்!
இந்த ஞாயிற்றுக்கிழமையில வீட்டுக்குள்ள அடைந்திருக்கிறது பதிலா, உங்க வீட்டுக்கு கிச்சனுக்கு ஒரு நாள் லீவு விட்டுட்டு, மத்தியானம் சிக்கன் சாப்பிட இங்க போகலாமே!
தளி ஏரிக்கு சற்று முன்பாக அமைந்துள்ள எஸ்.எஸ். நாட்டி ருசி மனை.
இந்த உணவகத்தின் மிகப்பெரிய சிறப்பு... இங்கு வழங்கப்படும் உணவுகளில் பெரும்பாலானவை நாட்டுக்கோழியை மையமாகக் கொண்டவை.
பிரியாணி, தந்தூரி, கிரில், கறி வகைகள், ரொட்டியுடன் பரிமாறப்படும் சிறப்பு குழம்புகள் இதன் தனிச்சிறப்பு.
அதுவும் வழக்கமான சமையல் முறை அல்ல... கிராமத்து பாட்டி காலத்துல சமைத்தது மாதிரி, விறகு அடுப்பில் மெதுவாக சமைக்கப்படும் உணவுகள். அதனால் கிடைக்கும் மணமும், சுவையும், தனி அனுபவம்.
குடும்பத்துடன் வருபவர்களுக்காக ஆறு பேர் அமரக்கூடிய இரண்டு தனி குடும்ப அறைகள். அதோடு பெரிய அளவிலான உணவருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட தளியின் குளிர்ந்த சூழலை ரசிக்க விரும்பும் ஓசூர் மக்கள், இந்த இடத்தை ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்கான சிறிய பயணமா திட்டமிடலாம்.
சாப்பாட்டிற்காக மட்டும் கூட ஒரு சிறிய பயணம் செல்லலாம் என்பதை நிரூபிக்கும் இடம்... எஸ்.எஸ். நாட்டி ருசி மனை.








