HosurOnline
HosurOnline  ›  Daily Hosur News  ›  Video News
Daily Hosur News · Video

Three Arrested at Hosur Checkpost with Intoxicant Pills Worth ₹2 Lakh

Published: 03-06-2026  ·  HosurOnline

விளக்கம்

SIPCOT Police seized intoxicant pills worth around ₹2 lakh from three passengers travelling on a Bengaluru–Coimbatore omni bus at Jujuwadi checkpost near Hosur.

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கோயம்புத்தூருக்கு போதை மாத்திரை கடத்தல் முயற்சி.

கடந்த நாள் இரவு ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல் துறையினர், பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக கோயம்புத்தூர் செல்ல இருந்த தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி ஆய்வு மேற்கொண்ட போது, கோயமுத்தூரைச் சேர்ந்த மூவர், சுமார் 2 லட்சம் மதிப்பிலான போதை தரும் மாத்திரைகள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

இதை தொடர்ந்து மூவரையும் கைது செய்து, போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஓசூர் காவல்துறையினர் போதை பொருள் கடத்தலை தடுத்து வருவது பொதுமக்களின் பாராட்டுக்களை பெறுகிறது.
பகிர்: WhatsApp X Facebook Threads