Hosur Hill Villagers Still Rely on Horses & Donkeys: Why No Bus Service to Kesthur? | Hosur News Update - Video
Hosur Hill Villagers Still Rely on Horses & Donkeys: Why No Bus Service to Kesthur?
📅 வெளியீடு நாள்: 21-08-2026
📄 விளக்கம்
Residents of Kesthur and surrounding hill villages near Hosur say they are still struggling without proper public transport despite a government-built road connecting the area.
Kesthur is located near Mekedatu and comes under Manjukondapalli Grade-II Panchayat. The panchayat has around 7,000 residents, more than 4,250 voters and over 1,300 ration-card holders.
Residents say they have been requesting bus connectivity for more than a year and that their petition to the Tamil Nadu Chief Minister was acknowledged in June.
The district administration is reportedly considering private mini-bus permits, while residents say they want a reliable government bus service. They also question whether private buses permitted to operate in hill areas are actually running on the permitted routes.
A government mini-bus could benefit more than 8,000 people across around 11 villages, including Plikkal, Belpatti, Manjukondapalli and Kesthur.
Residents further say the lack of transport is affecting children's education and contributing to child marriages.
The residents are now looking to the District Collector for direct intervention and proper bus connectivity.
ஓசூர் அருகே இன்றளவும் குதிரைகளையும் கழுதைகளையும் நம்பித்தான் மக்கள் பயணிக்க வேண்டுமா? ஏன் இந்த அவல நிலை?
இந்த காணொளியை முழுமையாக பார்த்தால், ஒரு அடிப்படை பேருந்து வசதிக்காக மலைவாழ் மக்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது புரியும்.
தமிழ்நாட்டின் வடமேற்கு திசையில், மாநிலத்தின் முதல் ஊராக அமைந்துள்ளது கெஸ்தூர். மேக்கேதாடுவிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சுமார் 7,000 மக்கள் தொகை கொண்ட மஞ்சுகொண்டபள்ளி ஊராட்சி, கெஸ்தூர் உள்ளிட்ட 11 ஊர்களை உள்ளடக்கிய, தமிழ்நாட்டின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள முதல் ஊராட்சியாக விளங்குகிறது.
உரிகம் முதல் கெஸ்தூர் வரை, தமிழ்நாடு அரசு சார்பில் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து வசதி வேண்டும் என கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இப்பகுதி மக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த நிலையில், மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கடந்த ஜூனில் பதில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் என்ன சிக்கல்? மாவட்ட நிர்வாகம் தனியாருக்கு சிறிய பேருந்து இயக்க அனுமதி வழங்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், அவ்வாறு தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஏன்? ஏற்கனவே கொடகரை, நூருந்து மலை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட மலை ஊர்களுக்கு, தனியார் சார்பில் சிறிய வகை பேருந்து இயக்க அனுமதிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கி இருந்தாலும், அப்பகுதிகளுக்கு தனியார், பேருந்துகளை இயக்குவது இல்லை.
பின்பு எதற்காக தனியார் இவ்வாறான மலை ஊர்களுக்கு பேருந்துகளை இயக்க அனுமதி பெறுகிறார்கள்?
தமிழ்நாடு Motor Vehicles Taxation Act, 1974 மற்றும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுற்றுலா பேருந்துகளை இயக்குவதற்கான வரி பல லட்சம் ரூபாய் இருக்கும் நிலையில், ரூட் பெர்மிட் பெற்றவர்கள் ஸ்பேர் பஸ் மூலம் குறைந்த வரியில் சுற்றுலா பேருந்துகளை இயக்க முடியும் என்பதால், இதுபோன்ற மலைப்பகுதி ரூட் பெர்மிட்களுக்கு பேருந்து முதலாளிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
"அனுமதி வழங்கப்பட்ட பாதையில் தனியார் பேருந்துகள் உண்மையில் இயக்கப்படுகிறதா என்பதை யார் கண்காணிக்க வேண்டும்?" என கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.
இச்சாலையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறிய வகை பேருந்து இயக்கப்பட்டால், உரிகம் மற்றும் மஞ்சுகொண்டபள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 15 ஊர்களைச் சேர்ந்த எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கின்றனர்.
கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற முடியாத சூழலில், குழந்தைத் திருமணம் போன்ற நடைமுறைகளும் மக்களிடையே தொடர்வதாக கூறுகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் இதை நேரடியாக ஆய்வு செய்து, அனைத்து மலை ஊர் மக்களுக்கும் முறையான பேருந்து வசதி கிடைக்க நடவடிக்கை எடுப்பாரா? காத்திருக்கின்றனர் மக்கள்.








