₹45 Monthly Ration Charge Near Hosur? Villagers Seek Answer from Tamil Nadu Food Minister | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

₹45 Monthly Ration Charge Near Hosur? Villagers Seek Answer from Tamil Nadu Food Minister

📅 வெளியீடு நாள்: 20-08-2026

📄 விளக்கம்

Residents of Muthirai and Bilikal villages in the Anchetty region have alleged that ration-card holders are paying ₹35 and ₹45 respectively for receiving free rice and other commodities through the Public Distribution System.

Around 40 cardholders from Muthirai reportedly pay ₹35 per card, while around 140 cardholders from Bilikal reportedly pay ₹45.

HosurOnline contacted ration-shop salesman Govindaraj regarding the allegation and subsequently contacted Anji, Deputy Secretary of the Anchetty Primary Agricultural Cooperative Credit Society responsible for the shop. He categorically stated that there is no practice of collecting such a fee.

The villagers now question whether they will have to continue paying such amounts in the coming months and are expecting an answer from the Tamil Nadu Food Minister.

ஓசூர் அருகே ரேஷன் அட்டைக்கு 45 ரூபாய் மாதம் ஒன்றிற்கு கட்டணமா? இது அறிவியலுக்கும் அப்பாற்பட்ட முறைகேடு!

விலையில்லா அரிசியை வாங்கி பயன்படுத்தும் அஞ்செட்டி வட்டம் உரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்திரை என்ற ஊரைச் சேர்ந்த சுமார் 40 குடும்ப அட்டைதாரர்கள் அட்டை ஒன்றுக்கு 35 ரூபாய் வீதமும், பிலிகல் ஊரைச் சேர்ந்த சுமார் 140 அட்டைதாரர்கள், அட்டை ஒன்றுக்கு 45 ரூபாய் செலுத்துவதாக ஓசூர்-ஆன்லைனிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, கடை விற்பனையாளர் கோவிந்தராஜ் என்பவரை 9361914673 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வினவினோம். அவர் குழம்பிய பதில்களை வழங்கியதை தொடர்ந்து, கடைக்கு பொறுப்பான அஞ்செட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் துணைச் செயலாளர் ஆஞ்சி என்பவரை 9787442224 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டோம். கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இல்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

வருகிற மாதங்களிலும் இந்த ஏழை எளிய மலைவாழ் மக்கள் இவ்வாறான கட்டணங்கள் செலுத்த வேண்டுமா? தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் இதற்கு விடை தருவார் என எதிர்பார்க்கும் மக்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads