“Asking for Patta for Livelihood—Is That a Crime?” 29 Families Protest Near Anchetty | Hosur News Update - Video
“Asking for Patta for Livelihood—Is That a Crime?” 29 Families Protest Near Anchetty
📅 வெளியீடு நாள்: 29-08-2026
📄 விளக்கம்
Around 29 families in Pooncholai near Vannathupatti in Anchetty taluk say they have been living and cultivating crops on about six acres of government land and had applied for patta. After the land was reportedly surveyed by the Revenue Department, the families say they were informed that the Anchetty Block Development Office is proposed to be established at the site. The families are now holding a continuous protest, seeking clarity on their homes and livelihood.
ஓசூர் அருகே பட்டா கேட்டது ஒரு குற்றமா? ஓசூர் அடுத்த அஞ்செட்டி வட்டம் வண்ணத்துப்பட்டி அருகே அமைந்துள்ளது பூஞ்சோலை எனும் சிற்றூர். இங்கு சுமார் 29 குடும்பத்தினர், ஆறு ஏக்கர் அரசு நிலத்தில் வீடுகள் கட்டி, விளை பொருட்களை உற்பத்தி செய்து வாழ்வதாகவும், பட்டா கேட்டு விண்ணப்பித்த நிலையில், வருவாய்துறை சார்பில் நிலத்தை அளந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென அஞ்செட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், இங்கு அமைய இருப்பதாக உள்ளாட்சித் துறை அலுவலர்கள் தெரிவித்தனராம். இதைத்தொடர்ந்து, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குடும்பத்தாருடன் ஈடுபட்டு வருகின்றனர்.








