Concerns Raised Over Encroachment and Pollution in Kelamangalam Lake | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Concerns Raised Over Encroachment and Pollution in Kelamangalam Lake

📅 வெளியீடு நாள்: 29-03-2026

📄 விளக்கம்

Concerns have been raised by local volunteers and residents regarding the condition of Pattalamman Lake in Kelamangalam, near Hosur.

The lake, spread across approximately 30 acres and part of the Panchapalli dam water system, is said to be facing issues such as long-term encroachments and pollution.

According to local sources, sewage discharge, dumping of waste, and other activities have contributed to the deterioration of the lake.

Residents have urged the district administration to take immediate steps to restore the lake in accordance with legal guidelines.

ஓசூரை அடுத்த கெலமங்கலத்தில் இத்தனை ஆக்கிரமிப்புகளா?. கெலமங்கலம் பட்டாளம்மன் ஏரியை மீட்டுத் தர தன்னார்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை.

பஞ்சப்பள்ளி அணை சின்னாற்றின் நீர் பிடிப்பு ஏரிகளில், 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட கெலமங்கலம் ஏரி சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், விளை நிலங்களின் நீர் பாசனத்திற்காக இந்த ஏரி திறக்காமல், தடுக்கப்பட்டு இருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம் ஆக்கிரமிப்பு, மறுபுறம் கெலமங்கலத்தின் சாக்கடை கழிவு நீர், இறைச்சி கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதி மக்களின் குப்பை கொட்டும் கிடங்கு என, அப்பகுதி பொதுமக்களாலேயே இந்த ஏரி சீரழிக்கப்பட்டு வருவதாக தன்னார்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இன்றைய சூழலில், இந்த ஏரியின் நீர் முழுமையாக மாசுபட்டு இருப்பதால், பகுதி மக்களுக்கு இனம் புரியாத நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக மக்களிடையே கருத்து நிலவுகிறது.

மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி, இந்த ஏரியை, பொதுப்பணித்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியோடு மீட்டெடுப்பார் என ஏங்கி நிற்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads