4-Year-Old Reunited with Family After Walking 1.5 km in Thenkanikottai | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

4-Year-Old Reunited with Family After Walking 1.5 km in Thenkanikottai

📅 வெளியீடு நாள்: 03-08-2026

📄 விளக்கம்

A four-year-old boy who wandered nearly 1.5 km from his home in search of his grandmother was safely reunited with his family in Thenkanikottai. After the child was found crying near the Government Boys Higher Secondary School on Anchetty Road, journalist Saravanan ensured his safety and handed him over to the police. Officers quickly traced the parents and reunited the child with his family after counselling them on child safety.

தேன்கனிக்கோட்டையில், பிஸ்கட் வாங்க சென்ற பாட்டியை தேடி, வீட்டை விட்டு ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே சென்ற நான்கு வயது சிறுவன். மீண்டும் வீட்டுக்குச் செல்லத் தெரியாமல், அஞ்செட்டி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அழுது கொண்டு நின்ற சிறுவனை தேன்கனிக்கோட்டை ஊடகவியலாளர் சரவணன் மீட்டு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தாராம்.

தாயுள்ளத்துடன் செயல்பட்ட காவல் ஆய்வாளர் சாவித்திரி, உடனடியாக போலீசாரை அனுப்பி பெற்றோரை தேடி கண்டறிந்துள்ளார்.

குழந்தையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பெற்றோருக்கு அறிவுரை கூறி, குழந்தையை ஒப்படைத்துள்ளார். விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் சாவித்ரி அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads