Kudisalur Near Denkanikottai Hit by Severe Housefly Infestation; Residents Blame Poultry Farm | Hosur News Update - Video

⬅️ மீண்டும் Hosur News Today பட்டியல் | Google Preferred News Source

Kudisalur Near Denkanikottai Hit by Severe Housefly Infestation; Residents Blame Poultry Farm

📅 வெளியீடு நாள்: 27-08-2026

📄 விளக்கம்

Kudisalur, near Denkanikottai in Krishnagiri district, is facing a severe housefly infestation, with residents alleging that a nearby poultry farm is responsible for the problem.

Residents of the village, which comes under Bettamugilalam Panchayat, say the fly problem has existed for around two years and has become particularly severe during the past three months.

They say the infestation has made it difficult to keep food, vegetables, fruits and drinking water inside their homes and has caused significant distress to families.

The poultry farm, when contacted by HosurOnline, attributed the deterioration in waste handling and fly-control measures to the absence of a veterinary doctor after the previous doctor left the company.

Bettamugilalam Panchayat Secretary Jayakumar said the administration had received complaints from residents and issued a notice directing the poultry farm to take measures to control the fly infestation. He said legal action would be initiated if appropriate action was not taken by August 28.

Residents have also raised concerns over the construction of additional poultry sheds near the village and appealed to the Krishnagiri District Collector to intervene.

ஓசூர் அருகே ஈக்கள் படையெடுப்பு!. வாந்தி பேதியால் பாதிக்கப்படுவதாக ஊர் மக்கள் புலம்பல்.

ஓசூர் அடுத்த தேன்கனிகோட்டை அருகே பெட்டமுகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட, இருதுகோட்டையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குடிசலூர் எனும் சிற்றூர்.

இந்த ஊர் முழுவதும், ஈக்கள் படையெடுத்து ஆர்ப்பரிப்பதால், அவற்றின் தொல்லையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கி தவிக்கின்றனர்.

வீட்டிற்குள் உணவு, காய், கனிகள், தண்ணீர் என எதையும் வைக்க முடியவில்லை. குழந்தைகளையும் வயது முதிர்ந்தோரையும், ஈக்கள் மொய்ப்பதால், அடிக்கடி அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 18 ஆண்டுகளாக ஊர் அருகே கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈக்களின் தொல்லை திடீரென ஏற்பட்டுள்ளது என்றும், குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக கடுமையான ஈ தொல்லை நிலவுவதாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக கோழிப்பண்ணை நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். பெயர் குறிப்பிட விரும்பாத அந்நிறுவனத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் நம்மிடம், "இந்த கோழி பண்ணையில் கடந்த பல ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் ஒருவர் சிறப்பாக பணிபுரிந்து வந்தார். திடீரென அவர் வேறொரு நிறுவனத்திற்கு பணி மாற்றம் ஆகி சென்று விட்டதாலும், மாற்று கால்நடை மருத்துவர் பணி அமர்த்த படாததாலும், கழிவுகளை கையாள்வதில் மற்றும் ஈ பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது" எனக் கூறினார்.

ஓசூர் ஆன்லைன் சார்பில், பெட்டமுகிலாலம் ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் அவர்களை தொடர்பு கொண்டு வினவினோம். பொதுமக்களின் புகார் தமக்கு கிடைத்ததாகவும், உடனடியாக பகுதி மக்கள் நல ஆய்வாளர் அவர்கள் மூலமாக ஈக்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கோழிப்பண்ணை நிர்வாகத்திற்கு அறிவிக்கை வழங்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் 28ஆம் நாளுக்குள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து சட்ட வல்லுநர் கூறும் பொழுது "CrPc Section 133(1)(b) அதாவது Section 152 BNSS, அதிகாரங்களை வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை வழங்கி உள்ளது. அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலும்." என தெரிவித்தார்.

குடிசலூரைச் சேர்ந்த ஜெய் கிருஷ்ணன் நம்மிடம் கூறும் பொழுது, "நடவடிக்கை எடுப்பதாக அரசு ஊழியர்கள் கூறுவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்தொடைப்பாக மட்டுமே தொடர்கிறது. இந்நிலையில் ஏற்கனவே ஐந்து கூடாரங்களில் இயங்கி வரும் இந்த பண்ணையில் மேற்கொண்டு ஏழு கூடாரங்கள் கட்டி வருகின்றனர். இந்த ஐந்து கூடாரங்களையும் இவர்களால் முறையாக பராமரிக்க இயலாத போது, மேற்கொண்டு ஏழு அமைக்கப்பட்டால், எங்களின் நிலை என்ன ஆகும்? ஆகவே, மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

பகிர்: WhatsApp Twitter Facebook Threads