Rayakottai Near Hosur: ₹3,000 Money Dispute Turns Into Attempt to Murder Case, Two Arrested | Hosur News Update - Video
Rayakottai Near Hosur: ₹3,000 Money Dispute Turns Into Attempt to Murder Case, Two Arrested
📅 வெளியீடு நாள்: 23-02-2026
📄 விளக்கம்
A ₹3,000 financial dispute between two individuals in Rayakottai near Hosur has escalated into an attempted murder case. According to reports, an argument over delayed repayment led to violence, resulting in one person sustaining injuries and being hospitalized.
Based on a complaint filed, two individuals have been arrested, while police continue questioning the other party involved.
Rayakottai police have also acted to prevent the spread of assault videos on social media that could incite tensions between groups in the area. Investigation is ongoing.
ஓசூர் அருகே 3000 ரூபாய் கொடுக்கல் வாங்கல் தகராறு, கொலை முயற்சி வழக்காக மாறியதால் சிறை சென்ற வாலிபர்கள்.
ஓசூரை அடுத்த ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயது ரகு, அதே பகுதியைச் சேர்ந்த 45 வயது கலீம் என்பவரிடம் 3000 ரூபாய் கைமாற்று வாங்கி, பத்து நாட்களுக்கு மேலாக பணத்தை திரும்பி கொடுக்காத நிலையில், ரகுவிற்கும் கலீமிற்கும் தகராறு. இதில் ரகு, கலீமை தாக்கியதாக கூறப்படுகிறது.
ஆத்திரமுற்ற கலீம், தன் உறவினர்களான 17 வயது சிறுவன் மற்றும் இருபது வயது தௌபிக் ஆகியோருடன் ரகுவின் வீட்டருகே சென்று தகராறில் ஈடுபட்டதாக புகார். இதனிடையே, ரகு தாக்கியதில் காயமடைந்ததாக, கலீம் மருத்துவமனையில் அனுமதி.
ரகுவின் மனைவி அளித்த புகாரின் பேரில் கலீமின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கலீமை தாக்கிய ரகுவிடம் காவல் துறையினர் வினவி வருகின்றனர்.
இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதமாக, தாக்குதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், அவற்றை தடுக்கும் விதமாக ராயக்கோட்டை காவல்துறையினர் திறம்பட நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.








