Hosur News, ஓசூர் செய்திகள் - தகுதி சான்று இல்லாமல் இயங்கிய 18 வண்டிகள் ஓசூரில் பறிமுதல்

தகுதி சான்று இல்லாமல் இயங்கிய 18 வண்டிகள் ஓசூரில் பறிமுதல்

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஈசுவர்மூர்த்தி ஆணையின்படி, மோட்டார் வண்டி ஆய்வாளர்கள் விசயகுமார் மற்றும் தரணிதர் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஓசூர் நகர் பகுதிகளில் தீவிர வண்டி ஆய்வு நடத்தினர்.

அப்போது தகுதி சான்று மற்றும் அனுமதி சீட்டு ஆகியவற்றை புதுப்பிக்காத,

14 மூன்று சக்கர ஆட்டோ வண்டிகள்,
3 டாடா ஏஸ் வண்டிகள்,
1 கால் டாக்சி என மொத்தம், 18 வண்டிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவை ஓசூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

உரிய ஆவணம் இல்லாமல் வண்டிகளை ஓட்டினால், பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: