Hosur News, ஓசூர் செய்திகள் - பெற்றோர் எதிர்ப்பால் காதல் இணை தற்கொலை

தண்டவாளத்தில் தலை வைத்து காதல் இணை தற்கொலை செய்து கொண்டது ஓசூர் அருகே மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

சூளகிரியை அடுத்துள்ள ராமசந்திரா உறை சேர்ந்தவர் முனிராசு. இவரது மகன் மல்லேஷ் (வயது25).

இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கிருஷ்ணப்பா மகள் ஜோதி 21 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் இவர்களது காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோர்களிடம் ஒப்புதல் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு இருவரது வீட்டின் பெற்றோர்களும் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட காதல் இணைகளான மல்லேஷ், ஜோதி இருவரும் நேற்று இரு சக்கர வண்டியில் வீட்டில் இருந்து புறப்பட்டு கெலமங்கலம் அருகேயுள்ள பைரமங்கலம் தொடர்வண்டி பாதை கதவு அருகே வண்டியை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் மல்லேஷ், ஜோதி தற்கொலை செய்ய முடிவு செய்து காருகொண்டபள்ளி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியலில் மல்லேஷ், ஜோதி ஆகிய 2 பேரின் உடல் துண்டாகி கிடந்தது. இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஓசூர் இருப்புப்பாதை காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் காவலர்கள் நிகவிடத்திற்கு வந்தனர்.

தொடர்வண்டி மோதி தண்டவாளத்தில் பிணமாக கிடந்த காதல் இணைகளான மல்லேஷ், ஜோதி ஆகிய 2 பேரில் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக இருப்புப்பாதை காவலர்கள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: