40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குன்றிப் போன சீனா
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் மிக நெருக்கடியான ஒரு நிலையில் உள்ளது இதற்கு அடிப்படை சீனாவின் அமெரிக்க அரசுடனான பொருளாதார மோதல் போக்கு.
இந்த மோதலால் புதிய முதலீடுகளும் பெருமளவில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் அதிரடி நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு தனது பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்டி வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 கால் ஊழிகளை ஒப்பிடுகையில் நான்காம் கால் ஊழி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 விழுக்காடு உயர்வு என்பது பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது.
நான்கு ஊழிகளின் சராசரிகளை வைத்து கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி என்று பார்த்தால் அது 6.1 விழுக்காடு என்ற அளவில், சீனா 1990களில் இருந்து இதுவரை மேற்கொண்டு வந்த வளர்ச்சியில் இது மிக மிகக் குறைவு என கணக்கிடப்பட்டுள்ளது.
சீன அரசு அமெரிக்க அரசுடனான பகைமை போக்கை கைவிட்டு நட்புக்கரம் நீட்டி வருவதால் தற்பொழுது அதன் உற்பத்தி துறை வளர்ச்சியடைந்து வரும் நிலையை கொண்டுள்ளது.
சீனப் பொருளாதாரத்திற்கு அமெரிக்கா மேற்கொண்டு பொருளாதார நெருக்கடிகளை தருமானால் இந்த ஆண்டிலும் சீனாவின் பொருளாதாரம் மேற்கொண்டு சரிந்து 5.9 என்கிற அளவில் நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசைப் போன்று அல்லாமல் சீன அரசு அதிரடியாக வரிகளில் பல சலுகைகளை கொடுத்தும், வளர்ச்சிக்கான உள் கட்ட்மான செயல்பாடுகளில் பெரும் முதலீடுகளை செலுத்தியும் தனது பொருளாதார வீழ்ச்சியை தடுத்து, வளர்ச்சிக்கான வழிகளை மேற்கொண்டு வருகிறது.
வங்கிகளும் முதலீடு வேண்டி வருபவர்களுக்கு தாராளமாக சட்ட சிக்கல்கள் உருவாக்காமல் கடன் வழங்க பெருமளவு பணம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
இந்தியாவில் வங்கிகளிலிருந்து கடன் வாங்குவது நெருக்கடியான ஒரு நிலை என்கிற ஒரு நிலையை நடுவன் அரசு மேற்கொண்டு வரும் நிலையில் சீன அரசு அதற்கு நேர் எதிர்மறையான நிலையை எடுத்து தனது பொருளாதார வளர்ச்சி மேலும் ஓங்கி செழிக்க வழிவகைகளை செய்துவருகிறது.








