Hosur News, ஓசூர் செய்திகள் - தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக பல வழக்குகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை சந்தித்து வருவதால் நெடுஞ்சாலை அமைத்துத்தர ஒப்பந்தம் மேற்கொண்ட சுமார் 5 நிறுவனங்கள் தம்மால் இந்த நேர தாழ்வுகளை தாங்கிக்கொள்ள இயலாது எனக் கூறி சுமார் எட்டு திட்டங்களை பல்வேறு மாநிலங்களில் கைவிட்டுள்ளனர்.

பல ஒப்பந்தங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை வேலை துவங்குவதற்கான நாளை அலுவல் பூர்வமாக கொடுத்துள்ளது. ஆனால் கொடுத்துள்ள நாளில் அவர்களால் நிலத்தை கையகப்படுத்தி ஒப்பந்தம் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த தாரர்களிடம் ஒப்படைக்க இயலாத சூழல் பல வழக்குகளை சந்தித்து வருவதால் ஏற்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களில் சுமார் 96 விழுக்காடு அளவிற்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. ஏனெனில் அந்த ஒப்பந்தங்களின் படி நிலங்கள் கையகப்படுத்துவது, நிலங்களின் விலை உயர்வால் மற்றும் பல வழக்குகளை சந்திப்பதால் இயலாத நிலையில் உள்ளது.

2016 17 ஆம் ஆண்டில் ஒரு ஹெக்டேர் நிலம் 1.3 என்ற அளவில் இருந்தால் இன்றைய நிலையில் அதன் மதிப்பு சுமார் 3.2 அழகிற்காக உயர்ந்துள்ளது நிலம் கையகப்படுத்துவதில் வழக்குகளை காட்டிலும் இந்த விலை ஏற்றம் பெருத்த இடர்பாடுகளை ஏற்படுத்துகிறது.

வரும் ஆண்டுகளில் இந்த விலை ஏற்றம் ஆனது மிகப்பெரிய சவாலாக அமையும் என விரைவு வழிப்பாதை தொடர்பில் அனுபவமுள்ள பலர் கருத்து கூறுகின்றனர்.

பெரும்பாலான விலையேற்றம் திட்டம் அறிவிக்கப்பட்ட உடன் ஏற்படுகிறது.
 ஏனெனில் சாலைவசதி வருவதால் அதன் சந்தை மதிப்பு அதிரடியாக உயர்த்தப்படுகிறது.

50 விழுக்காடு அளவிற்கான திட்ட செலவு நிலம் கையகப்படுத்தப்படும் மட்டும் செலவிடப் படுவதாக நடுவன் அரசின் நெடுஞ்சாலைத் துறை தெரிவிக்கிறது.

அரசால் 750 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு திட்டத்தை வகிக்கிறது என்றால் இந்த நில விலை ஏற்றத்தால் 110 கிலோ மீட்டர் அளவிற்கு சுறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது.

எடுத்துக்காட்டாக டெல்லியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை - 1 வழியாக கட்ரா என்ற ஊருக்கு செல்வதற்கு 729 கிலோமீட்டர் தொலைவு சாலை அமைக்க வேண்டி உள்ளது. இதற்காக அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

நிலத்தின் விலை ஏற்றத்தால் டெல்லியிலிருந்து கட்ராவிற்கு 110 கிலோமீட்டர் அளவிற்கு மட்டுமே சாலை தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. செலவு இரண்டிற்கும் ஒன்றாக உள்ளது தான் குறிப்பிடத்தக்கது.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: