ஓசூர் மக்கள் மன்றம் மற்றும் காவல்துறை இணைந்து ஓசூர் கோகுல் நகரில், பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஓசூர் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு நாகராஜ் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார்.
மக்கள், வெளியூருக்கு செல்வதாக இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு வெளியூர் செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பொதுவாகவே, கதவை பூட்டிவிட்டு வெளியில் செல்லும் பொழுது, பூட்டு வெளியில் தொங்கினால், குடியிருப்பவர் வீட்டில் இல்லை என்பதை எல்லோரும் எளிதாக அறிந்து கொள்ளலாம். எனவே, பூட்டு வெளியில் தொங்காதபடி பூட்டி விட்டு செல்ல வேண்டும் என ஓசூர் மக்களை கேட்டுக் கொண்டார்.
காவல்துறையினர் மேற்கொள்ள இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார்.
ஏராளமான பொதுமக்கள், அவரது காவல் ஆய்வாளர் அவர்களின் அறிவுரைகளை முழுமையாக கேட்டனர்.
இந்நிகழ்ச்சியில், TPSOH தலைவர் திரு சரவணன், ஓசூர் நகர் காவல் ஆய்வாளர், TPSOH உறுப்பினர்கள், கோகுல் நகர் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் குடியிருப்போர், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








