Hosur News, ஓசூர் செய்திகள் - கருநாடக மாநிலத்திலிருந்து ஓசூர் பகுதிக்கு இடம்பெயர்ந்த 30 காட்டு யானைகள்

கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து, 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தளி மற்றும் நொகனூர் காட்டுப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதால், பொதுமக்களும், காட்டுப்பகுதி அருகே உள்ள வயல்வெளிகளுக்கு செல்ல வேண்டிய உழவர்களும் அச்சமடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் ஓசூர் அருகே இடம் பெயர்ந்து உள்ளதால், வனத்துறையினர், ஊர் மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உழவர்கள் இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டுப் பகுதியை ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், காட்டு யானைகளை பார்த்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும், வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: