ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, நூர் முகமது என்பவர், பழைய பேப்பர் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்கும் கிடங்கு நடத்தி வருகிறார்.
கடந்த நாள், இவரது கிடங்கில் வேக வேகமாக தீ பரவியது. தீயை அணைக்க அருகில் இருப்பவர்கள் முயற்சி செய்தும், இயலாததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காவல் துறையினர் தீ விபத்து குறித்து வழக்கு பதிந்து வினவி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தீபாவளி ராக்கெட் கிடங்கில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.








