ஓசூரைச் சுற்றி, 1280 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகள் உள்ளன. இந்த காட்டுப்பகுதியில், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, மற்றும் கிருஷ்ணகிரி என ஏழு வனச்சரகங்கள் உள்ளன.
இப்பகுதிகளில், ஏராளமான காட்டு யானைகள், சிறுத்தைகள், நரி, உடும்பு, காட்டு முயல்கள் என ஏராளமான காட்டு மிருகங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றின் நடுவே மனிதர்கள் குடியிருப்பு பகுதிகளையும், சிலர் தொழிற்சாலைகளையும் அமைத்துள்ளனர்.
கடந்த நாள் இரவு, சிறுத்தை போன்ற உடலமைப்பை கொண்ட விலங்கு ஒன்று, தேன்கனிக்கோட்டையை அடுத்த அன்னியாளம் பகுதியில், Crusher தொழிற்சாலை அருகே சாலையை கடப்பது, அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை போன்ற வேட்டையாடும் வனவிலங்கு நடமாட்டம், ஊர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.








