ஓசூரில், ஏற்றுமதி நடுவம் அமைப்பதற்கு விரைவாக பணி நடந்து வருகிறது என குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பேச்சு.
இந்தியாவில், ஒட்டுமொத்த ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு சுமார் பத்து விழுக்காடு அளவிற்கு இருக்கிறது. நடப்பாண்டில் வளர்ந்து வரும் துறைகளான மின்சாரத்தில் இயங்கும் வண்டிகள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆகியவற்றின் ஏற்றுமதி பெருகி வருகிறது. இந்தத் துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக ஓசூர் உள்ளிட்ட பத்து இடங்களில் ஏற்றுமதி நடுவங்கள் நிறுவுவதற்கு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என அமைச்சர் தா மோ அன்பரசன் அவர்கள் கோயம்புத்தூர் கொடிசியா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.








