ஓசூர் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் அருவாளால் தாக்கப்பட்டதன் பின், தமிழ்நாடு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களை பாதுகாக்க, தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் என்ன? என்று தெரிந்து கொள்ளலாம், வாங்க!
வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்பொழுது நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்தேறி வருகிறது. வழக்கறிஞர்களின் தொழில், பல நேரங்களில் குற்றவாளிகளுடன் நெருக்கமான சூழலில், அவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கும் விதமாக அமைவதால், குற்றவாளிகளால் தாக்கப்படும் சூழ்நிலைகளுக்கும் உள்ளாகும் நிலை உள்ளது.
வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை தடுக்கும் விதமாகவும், தாக்குபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்வதற்கு, சில மாநிலங்கள் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநிலத்தை பொருத்தவரை, வழக்கறிஞர் ஒருவரை தாக்கும் குற்றவாளி, குறைந்தது ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு உட்படுவார். தண்டத்தொகையாக ரூபாய் ஒரு லட்சம் வரை நீதிமன்றங்களால் விதிக்க இயலும்.
வழக்கறிஞர் ஒருவரை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள், அவர் சார்ந்துள்ள வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் அல்லது செயலாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் ஓசூரில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீதிமன்ற வளாகத்தில் வாயில் முன்பு கூட்டமைப்பின் மாநில தலைவர் நா மாரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓசூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இந்திய அளவில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய சட்டத்தை மத்திய அரசு ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் மாரப்பனிடம், ஊடகவியலாளர் ஒருவர், தனிப்பட்ட பகையினால் நடைபெற்ற இந்த தாக்குதலை பொது தாக்குதலாக எடுத்துக்கொண்டு போராட்டங்கள் தேவையா என வினவினார். அதற்கு பதில் அளித்த மாரப்பன் அவர்கள்,








