Hosur News, ஓசூர் செய்திகள் - குதிரை ஒன்று, கால்நடை பண்ணை வளாகத்தில் இருந்து தப்பி வந்து

ஓசூரில் மட்டுமே இப்படி எல்லாம் நடக்கும்! மாடு முட்டியதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆடு முட்டியாத கூட கேள்விப்பட்டிருக்கிறோம்.  நாய் கடித்து பலர் காயமடைவது, யானை தாக்கியதில் படுகாயம் அடைவது, ஓசூர் பொருத்தவரை, வழக்கமான செய்தி.  ஒட்டகம் கடித்தது, கழுதை உதைத்தது போன்ற செய்திகள் கூட, என்றாவது ஒருநாள் கேள்விப்பட்டிருக்கிறோம்.  குதிரை முட்டி ஒருவர் படுகாயம், முட்டிய வேகத்தில் குதிரை செத்தே போனது, என்ற இந்த செய்தி தான் புதிது.

ஓசூர் மத்திகிரியில், கால்நடைத்துறை மருத்துவமனை, மாட்டுப் பண்ணை, மாடுகள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நடுவம், கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை என்றே தனியாக கல்லூரி, கோழி உற்பத்தி , குதிரை உற்பத்தி என ஏராளமான தமிழ்நாடு அரசின், கால்நடை துறை சார்ந்த, பல்வேறு துறைகளும், ஆராய்ச்சி நடுவங்களும், ஓசூர் Cattle Farms, என்று உலக அளவில் அறியப்படும், மத்திகிரி கால்நடை பண்ணை வளாகத்தில் அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குதிரை ஒன்று, கால்நடை பண்ணை வளாகத்தில் இருந்து தப்பி வந்து, சாலை ஓரம் இருப்பவர்களை கடித்து வைத்ததாக செய்தி வந்தது. புகைப்படமோ, காணொளியோ ஆதாரமாக இல்லாததால், அந்த செய்தி போலி என்றே கருதப்பட்டு, கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் அரசு மருத்துவமனையில், குதிரை முட்டி படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.  அது குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற பொழுது, குதிரை மூட்டியதில் குதிரை பலியானது, என்கிற செய்தி அறிந்து, வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

இதுகுறித்து ஓசூர் ஆன்லைன் சார்பில், கால்நடைத்துறை அலுவலகங்களிடம் வினவிய போது, குதிரை மனிதரை முட்டியது குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்றும், ஆனால் அவர்கள் வளாகத்தில் வேலி அமைத்து வளர்க்கும் குதிரை ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வேலியை தாண்டி சென்று, சாலையில் இறந்து கிடந்தது உண்மை என்றும் தெரிவித்தனர்.

வேலிகளைத் தாண்டி, கால்நடை பண்ணையின் குதிரை, சாலையில் வந்து மடிவது, இதுவே முதல் முறையா? என நினைவிய போது, அவர் கூறிய பதில், மேலும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் இருந்தது. குதிரைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடும் பொழுது, குறிப்பாக மாலை நேரங்களில் இனச்சேர்க்கையில் நடைபெற்றால், அவை ஒன்றுக்கொன்று போட்டி போட்டு, சண்டையிட்டுக் கொள்ளும்.  அந்த சண்டை வலுப்பெறும் பொழுது, தோற்றுப் போன குதிரை, வளாகத்தை விட்டு வெளியே வந்து விடுகிறது.  இத்தகைய நிகழ்வுகள், அவ்வப்பொழுது ஒன்று, இரண்டு, நடந்து கொண்டே தான் இருக்கின்றன, என தெரிவித்தார்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: