ஓசூர் நெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்ட பொழுது, நெய் உற்பத்தி செய்வதற்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வெண்ணையில், கரப்பான் பூச்சிகள், பூஞ்சான் மற்றும் குப்பைகள் கிடப்பது அறிந்து, அலுவலர்கள் அதிர்ச்சி.
ஓசூரில் இயங்கி வரும் நெய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இன்று வியாழக்கிழமை, ஒசூர் உணவு பாதுகாப்பு அதிகாரி முத்து மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த தொழிற்சாலையில் விளக்கெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட, நெய் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்த தேவையற்ற பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
அந்த பொருட்களை, உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது அங்கிருந்த வெண்ணையில், கரப்பான் பூச்சி, குப்பைகள், மற்றும் பூஞ்சை படிந்திருந்தது தெரிய வந்தது.
மேலும் அந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட நெய் மாதிரிகளை எடுத்த உணவு பாதுகாப்பு துறையினர், அதனை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.








