Hosur News, ஓசூர் செய்திகள் - மாத சம்பளம், அது பேங்குக்கு. கிம்பளம் வீட்டு செலவுக்கு | TNEB Bribe | Scandal

மாத சம்பளம், அது பேங்குக்கு. கிம்பளம் வீட்டு செலவுக்கு. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கையூட்டு வாங்கி, தொடர்ந்து கைதாகும், அரசு ஊழியர்களின் அவலப்போக்கு! ஞானி ஒருவர் குறிப்பிடுகிறார், மாட்டிக் கொள்ளாத வரை, அனைவரும் உத்தமர்களே! 

மின்சார இணைப்பிற்கு விண்ணப்பித்து, கையூட்டு கொடுக்காமல் மின் இணைப்பை பெற்றவர்கள், அல்லது, இருக்கும் இணைப்பை இடம் மாற்றம் செய்தவர்கள், அல்லது, இருக்கும் இணைப்பிற்கு கட்டணத்தை மாற்றி அமைத்தவர், தமிழ்நாட்டை பொறுத்தவரை, இனி தான் பிறந்து வர வேண்டும், என மின்வாரிய துறையில் தலைவிரித்தாடும் கையூட்டு பிரச்சனை தொடர்பாக, தன்னார்வலர் ஒருவர் கருத்து கூறினார். 

தேன்கனிக்கோட்டை அருகே, அஞ்செட்டி அடுத்துள்ள, சேசுராஜபுரம் ஊரை சேர்ந்தவர் விவசாயி மோயிஸ். இவர் தனது விளை நிலத்திற்கு, தோட்டக்கலை மின் கட்டணத்தில், மின் இணைப்பு பெற, தாம்சனபள்ளி, துணை மின் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். 

அவரிடம், இதற்கான கட்டணம் என ரூபாய் இருபத்தி ஓராயிரம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. வாங்கிய தொகைக்கு ரசீது தராமல், மின்வாரிய துறையின் அலுவலகத்தினர், ரூபாய் பதினாராயிரத்து ஐநூறுக்கு மட்டும், ரசீது வழங்கியுள்ளனர். 

கூடுதலாக பணம் பெற்றுக் கொண்ட நிலையிலும், மின் இணைப்பிற்கான மீட்டர் வழங்காமல், விவசாயி மோயிஸ் அவர்களை, இங்கு அமங்குமாக, அலங்களித்துள்ளனர். அந்த அலுவலகத்தில் பணியாற்றும், Foreman அலி என்பவரை, மோயிஸ், மின் மீட்டர் வழங்கும் படி வேண்டியுள்ளார். 

அதற்கு Foreman அலி, தமக்கு ரூபாய் பத்தாயிரம், கையூடாக வழங்கினால் தான், மீட்டர் வழங்க இயலும் என, கூறியுள்ளார். 

கையூட்டு கொடுக்க விரும்பாத விவசாயி மோயிஸ், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் அறிவுரைன்படி, வேதிப்பொருள் தடவிய பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை, Foreman அலியிடம், மோயிஸ் வழங்கினார். 

அப்போது மறைந்து காத்திருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை, காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல்துறையினர், Foreman அலியை, கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். 

இதனால் அந்த பகுதி அரசு அலுவலர்களிடையே, அதிர்ச்சி அலை ஏற்பட்டது. ஞானி ஒருவர் குறிப்பிடுவது போல, மாட்டிக் கொள்ளாதவரை, அனைவரும் உத்தமர்களே!

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: