Hosur News, ஓசூர் செய்திகள் - 5:32 இப்போது ப்ளே ஆகிறது MSME Loans | MSME கடன் திட்டங்கள் குறித்த ஒரு பார்வை

எம்.எஸ்.எம்.இ வங்கி கடன் திட்டங்கள் குறித்து கனரா வங்கி சார்பில், விளக்கம் வழங்கப்பட்டது.  கூட்டத்தில் பங்கெடுக்க இயலாதவர்களுக்கு, ஓசூர் ஆன்லைன் சார்பில், எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் குறித்த ஒரு பார்வை.  இந்த தகவல்கள் பயனுள்ளது என்று நீங்கள் கருதினால், இந்த தகவல்களால் பயன்பெறுபவர்களுக்கு, இந்த youtube காணொளியை ஃபார்வேர்ட் செய்து அவர்களுக்கு உதவுங்கள்.

M. S. M. E.  Micro, Small and Medium Enterprises  துறைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்த துறைகள், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தொழில்முனைவோர்களுக்கு தங்கள் கனவுகளை செயல்படுத்த உதவுகின்றன. M. S. M. E. துறைகளை மேம்படுத்த, பல வங்கி மற்றும் அரசின் கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வர்த்தகத்தில், M. S. M. Eகள் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 45 விழுக்காடு பங்களிப்பு அளிக்கின்றன. வேலை வாய்ப்பு வழங்குவதில் இத்துறைகள் மொத்த உற்பத்தி திறனின் இருபத்தி எட்டு விழுக்காட்டிற்கும் மேலானவை. 120 மில்லியனுக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை M. S. M. E. உருவாக்கியுள்ளன. உள்ளூர் வளர்ச்சி, கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் MSME முதன்மையான பங்கு வகிக்கின்றது.

M. S. M. E. நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், வளர்ச்சி அடையவும் தேவையான பணத்தை வழங்குவதற்காக இந்திய ஒன்றிய அரசும், வங்கிகளும் ஓசூர் ஆன்லைன் பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றில் முதன்மையான சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.

முதலாவதாக, பிரதம மந்திரி முத்த்ரா யோஜனா P.M.M.Y.திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படும் மொத்த தொகை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலானவற்றை சிஷு என்றும், ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை கிஷோர் என்றும், 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை தருண் என்றும்,  பெயர் சூட்டி அழைக்கின்றனர்.

இந்த கடன் திட்டம், முதலீடு செய்ய விரும்பும் புதிய தொழில்முனைவோருக்கு உதவுகிறது. வங்கி தகுதி அடிப்படையில், எந்த கோலாட்டரலும் இல்லாமல் கடன் பெற முடியும்.  அதாவது, எவ்வித சொத்து ஆவணமோ அல்லது அடமானம் வைப்பதற்கான பொருட்களோ அல்லது எந்த அடிப்படை அசையா சொத்தும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.

இரண்டாவது திட்டமாக, ஸ்டாண்டப் இந்தியா திட்டம். இந்த திட்டம், ஓசூர் ஆன்லைன் குறிப்பாக பெண்களுக்கும், அதிலும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு, தொழில் தொடங்க உதவுகிறது. ரூபாய் பத்து லட்சம் முதல் ஒரு கோடி வரை, இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இது உற்பத்தி, சேவை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது.

மூன்றாவது திட்டத்தின் பெயர் சிட்பி ஸ்டார்ட் அப் திட்டம். சிறு தொழில்முனைவோருக்கு கடன் உதவி வழங்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் சிட்பி முதன்மை பங்கு வகிக்கிறது.

ஸ்டார்ட் அப் கார்னர் திட்டத்தின் கீழ், M. S. M. E. தொழில்கள் தேவையான பண உதவியை பெற சிட்பி உதவுகிறது.

மைக்ரோ யுனிட் பிளான்கள் திட்டத்தின் கீழ், புதிதாக தொடங்கிய தொழில்களுக்கு மிதமான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

நான்காவது திட்டமாக C.G.M.S.E. எனப்படும் Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises திட்டம், M. S. M. E. தொழில்கள், எந்த கோலாட்டரலும் இல்லாமல் கடன் பெற உதவும். இது தொழில்முனைவோருக்கு தேவையான பண தேவைகளை உறுதி செய்கிறது.

ஐந்தாவது திட்டமாக மகிலா உத்யம் நிதி திட்டம், பெண் தொழில் முனைவோர்களுக்கு M. S. M. E.  துறையில் உதவுகிறது. சிட்பி மூலம் வழங்கப்படும் இந்த திட்டம், பெண்கள் முன்னெடுக்கும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. குறைந்த வட்டி விகிதத்தில் பண உதவி  கிடைப்பதுடன், விளம்பர செலவுகளுக்கும் இது உதவுகிறது.

M. S. M. E. கடன் திட்டங்களின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

M. S. M. E. கடன் திட்டங்களின் கீழ், பெறப்படும் கடன்களுக்கு, முகப்புத் தொகை தேவை இல்லை. பல கடன் திட்டங்களின் கீழ், ஓசூர் ஆன்லைன் கோலாட்டரல் இல்லாமல் நிதி கிடைக்க வழிவகுக்கின்றன.

குறைந்த வட்டி விகிதம், M. S. M. Eகளுக்கு வங்கிகள் மற்றும் அரசால் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

கடன் விண்ணப்பிக்கும் செயல்முறை எளிமையாகவும், துரிதமாகவும் இருக்கும்.

தொழில் தொடங்க உடனடி பணம் கிடைக்கின்றது.

M. S. M. E. கடன் திட்டத்தில் உள்ள சவால்கள் குறித்து பார்க்கலாம்.

கடன் பெறுவதற்கான ஆவண சிக்கல்கள், ஊர் புற தொழில்களுக்கு குறைந்த அளவே கிடைக்கும் வாய்ப்புகள், சரியான வங்கி ஆலோசனை ஈடுபாடு குறைபாடு போன்றவை, தொழில் முனைவோருக்கு, M. S. M. E.  திட்டத்தில் கடன் பெறுவது சவாலாக அமைகிறது.

இதற்கு தீர்வாக, என்ம முறை, அதாவது டிஜிட்டல் விண்ணப்ப நடைமுறைகளை மேம்படுத்தல் தேவையாக உள்ளது.  ஊர் புறங்களில், உடனடி பண தேவைக்கு, M. S. M. E.  கடன் திட்டங்கள் உதவ வேண்டும். தொழில்முனைவோருக்கு பயிற்சி மற்றும் நிதி மேலாண்மை ஆலோசனை வழங்குதல் அடிப்படையாக இருத்தல் வேண்டும்.

M. S. M. E. துறைகள் இந்தியாவின் பொருளாதார தூண்களாக திகழ்கின்றன. சிறு தொழில்முனைவோருக்கு அரசாங்கம் வழங்கும் கடன் திட்டங்கள் மூலம் இந்த துறைகள் புதுமை மற்றும் வளர்ச்சியில் முன்னேறுகின்றன. புதிய தொழில்நுட்ப உதவிகளும், வங்கியின் உதவிகளும், M. S. M. E.  தொழில்முனைவோருக்கு புதிய உச்சங்களை அடைய உதவும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க வாய்ப்பு இல்லை.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: