Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூரில் இருந்து துபாய் செல்ல இருக்கிறீர்களா?

ஓசூரில் இருந்து துபாய் செல்ல இருக்கிறீர்களா? எச்சரிக்கையாக மனுசெய்யா விட்டால், உங்களது விசா கோரிக்கை தள்ளுபடி செய்யப்படலாம். ஓசூரில் இருந்து துபாய் செல்ல விரும்பும், தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், துபாயின் புதிய சட்ட நடைமுறைகளின் படி, விசா விண்ணப்பிக்க, டிராவல் ஏஜென்சி நிறுவன உரிமையாளர் அறிவுருத்துகிறார்.  துபாயின் புதிய விசா சட்டங்கள் என்ன சொல்கிறது, நமது விசா விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படாமல் இருப்பதற்கு, என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிந்து கொள்ளலாம், வாங்க. 

துபாயின் புதிய விசா சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன், விசா, அதாவது நுழைவுச்சீட்டு, வேண்டி விண்ணப்பம் செய்பவர்களில், 99 விழுக்காட்டினருக்கு, எளிதாக விசா கிடைத்து வந்த நிலையில், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தபின், விண்ணப்பிப்பவர்களில், நூற்றுக்கு சுமார் 6 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுகிறது. 

ஒரு முறை விண்ணப்பிப்பதற்கான கட்டணம், ரூபாய் 14,000.  மேலும் விமான கட்டணத்தை விசா, அதாவது நுழைவுச்சீட்டு, கிடைக்காமல் ரத்து செய்தால், அதற்கான செலவினம் ரூபாய் 20,000. ஆகவே, நுழைவுச்சீட்டு விண்ணப்பித்து கிடைக்காமல் போனால், செலவினம் மட்டும் ரூபாய் 34,000 வீணாகி விடுகிறது. 

துபாயின் புதிய நுழைவுச்சீட்டு விண்ணப்ப சட்ட நடைமுறைகளின் படி, நுழைவுச்சீட்டு விண்ணப்பிப்பவர், இந்தியா திரும்புவதற்கான, விமான பயண சீட்டை, QR குறியீடு கொண்ட பகுதியை, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, பதிவேற்ற வேண்டும். 

அதேபோன்று, அங்கு தங்க இருக்கும் விடுதியில் முன் பதிவு சான்று, QR குறியீடு கொண்ட பகுதியை, விண்ணப்பிக்கும் போதே, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். 

உறவினர் அல்லது நண்பர்கள் இருப்பிடத்தில் தங்குவதாக இருந்தால், அல்லது விடுதி அல்லாத வேறு ஏதாவது ஏற்பாட்டில் தங்குவதாக இருந்தால், அதற்கான முழு ஆவணச் சான்று, நுழைவுச்சீட்டு விண்ணப்பிக்கும் போதே, இணையதளத்தில் பதிவேற்றி விட வேண்டும்.

மேலும், இரண்டு மாதங்களுக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பிப்பவர்களின், வங்கி கணக்கில், United Arab Emirates dirham 5,000, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம், இருப்பு காட்ட வேண்டும்.  அல்லது, இந்த தொகைக்கு ஈடான, கிரெடிட் கார்டு வசதி வைத்திருக்க வேண்டும். 

துபாய் செல்வதற்கானதுபாயின் புதிய நுழைவுச்சீட்டு சட்ட நடைமுறைகளை, ஓசூரில் இருந்து துபாய் செல்ல விரும்புபவர்கள், முறையான அறிவுரைகள் பெற்று, விண்ணப்பித்தால், துபாய் செல்வதற்கான நுழைவுச்சீட்டு, எளிதாக கிடைக்கும்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: