Hosur News, ஓசூர் செய்திகள் - ஓசூர் காமுகன் சிக்கியது எப்படி? கால் உடைந்தது ஏன்?

ஓசூர் காமுகன் சிக்கியது எப்படி? கால் உடைந்தது ஏன்? கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது ஏக்கல்நத்தம் எனும் ஊர்.  இந்த ஊரைச் சேர்ந்த, 35 வயதுடைய லட்சுமணன், ஓசூரை அடுத்த, உளியாளம் பகுதியில், வாழ்ந்து வந்துள்ளான்.  ஒசூரில் பிச்சை எடுத்து தனது வயிற்றுப் பசியை ஆற்றி வந்த என்பது வயது மூதாட்டியை, கோயில் பகுதியில் இறக்கி விடுவதாக வாக்குறுதி கொடுத்து, லட்சுமணன், இருசக்கர வண்டியில் அழைத்து சென்று, சானமாவு காட்டுப் பகுதியில் வைத்து, மனித இனம் கற்பனை செய்ய இயலாத, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளான். 

மூதாட்டி கடுமையான குருதி போக்கில், தேசிய நெடுஞ்சாலையோரம் மயங்கிய நிலையில் கண்ட அப்பகுதியினர், மூதாட்டியை மீட்டு, நூற்று எட்டு ஆம்புலன்ஸ் மூலம், ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர், ஒசூர் பேருந்து நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், ஏக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர்தான், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

உளியாளம் வீட்டிலிருந்த லட்சுமணனை தேடி காவல்துறையினர் விரைந்தனர். காவல்துறையினரை கண்டு, ஓடி தப்பிக்க முயன்றுள்ளான். காவல்துறையினர் விரட்டி பிடிக்க முயற்சித்த போது, வழுக்கி விழுந்த லட்சுமணின் வலது கால் முறிந்துள்ளது. ஒசூர் அரசு மருத்துவமனையில், லட்சுமணன் கால் முறிவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: