Hosur News, ஓசூர் செய்திகள் - Hosur Daily News Podcast 14th June 2025,

வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்றத் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் பங்கேற்றார். 

ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, ஓசூர் ஊராட்சி ஒன்றியம் சின்னச்சந்திரம் ஊராட்சியில், சென்னசந்திரம் ஊரில், ஒன்றிய பொது நிதியிலிருந்து இருபத்தி நான்கரை இலட்சம் ரூபாய் மதிப்பில், தார் சாலை அமைக்கும் பணிக்கு, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. 

ஓசூர் மத்திகிரி கூட்ரோடு ரவுண்டானாவில் எட்டு முக கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. 

ஓசூர் தொடர்வண்டி நிலையத்தில், ஆறரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஓசூர் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் நேரில் ஆய்வு செய்தார். 

பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில், தனது பெயரைக் கூட எழுதத் தெரியாத வகையில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மாணவர்களை, ஒன்பதாம் வகுப்பில் அனுமதிக்க மறுத்த தலைமை ஆசிரியர்.  முழுவதும் எழுத படிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, அனைத்து எழுத்துக்களையும், குறைந்த அளவு, அடிப்படையாக தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க இயலும் என, தலைமையாசிரியர் புலம்பல். 

தமிழ்நாட்டில் மாங்காய் விளைச்சல் சிறப்பாக உள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆந்திராவில் தமிழ்நாட்டிலிருந்து மாங்காய் கொள்முதல் செய்து கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதே நேரத்தில், ஆந்திராவில் இருந்து தக்காளி போன்ற பிற காய்கறிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர, தமிழ்நாடு விளைபொருள் உற்பத்தியாளர்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கெலமங்கலம் அருகே குட்டூரில், மின் கசிவு ஏற்பட்டு இறந்த இரண்டு மாடுகளுக்கு இழப்பீடாக, மாட்டின் உரிமையாளருக்கு, ரூபாய் ஐம்பதாயிரத்தை, முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி வழங்கினார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வரும், தளியைச் சேர்ந்த திரு கணேஷ் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக மாநில ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓசூர் சுற்றுவட்டார காப்பு காட்டுப்பகுதிகளில், ஏராளமான மலைப் பாம்புகள் வாழ்ந்து வருகின்றன.  அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கையாக, குறிப்பிட்ட சில பகுதிகளை மலைப்பாம்புகளுக்கான சரணாலயமாக அரசு விரைந்து அறிவிக்க வெளியிட வேண்டும், என தன்னார்வலர்கள் கோரிக்கை.

ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 2 யானைகளும், இராயக்கோட்டை ஊடேதுர்கம் வனப்பகுதியில் 4  யானைகளும்,  தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில் 2 யானைகளும், நொகனூர் ஆலஹள்ளி வனப்பகுதியில் 2  மற்றும் தாவரக்ககரை வனப்பகுதியில் 5 யானைகளும் முகாமிட்டுள்ளன.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: