Hosur News, ஓசூர் செய்திகள் - Bevanatham Nanjundeswarar Temple: A 700-Foot Rock Hill Shiva Shrine Near Hosur

Located between the protected forests of Denkanikottai and Udedurgam near Hosur, the Bevanatham Nanjundeswarar Temple stands atop a striking 700-foot rock hill.

The temple, built between natural rock formations, requires a challenging climb involving steep rock surfaces and iron handrails. Only 31 carved steps exist at the base, with local legends explaining why further steps were never built.

From the summit, visitors can witness panoramic views of the surrounding forests and dramatic rock formations.

The temple is known not only for its spiritual significance but also for offering a unique combination of trekking, adventure, and natural beauty.

The Hill Reveals Itself

ஓசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை மற்றும் ஊடேதுருக்கம் பாதுகாக்கப்பட்ட காடுகளின் நடுவில் ஒரு தனித்த கற்பாறை மலை உயர்ந்து நிற்கிறது.

அந்த கற்பாறை மலையின் உச்சியில், பாறை குகைகளுக்கு இடையே, பழமையான ஒரு சிவன் ஆலயம்…! அதுதான், பேவநத்தம் “அருள்மிகு சிவ நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்”.

Travel Preparation

ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள விரும்புகிறீர்கள், அதே வேளையில் அந்தப் பயணத்தில் சாகசம்… ட்ரெக்கிங்… கண்கொள்ளாக் காட்சிகளை கண்டு ரசிக்கவும் விருப்பம்… என, இந்த நான்கையும் ஒரே பயணத்தில் அனுபவிக்க விரும்பினால், பேவநத்தம் சென்றுவர பயணத்திட்டம் மேற்கொள்வது சரியான தேர்வாக அமையும். 

உடல் வலிமையுடன் மன வலிமையும் இந்த பயணத்திற்கு கண்டிப்பான தேவை.

Journey from Hosur

ஓசூரில் இருந்து கெலமங்கலம் வழியாக, அனுசோனை ஊரை அடைந்ததும் வலது பக்கம் திரும்பும் சாலை நம்மை நேராக பேவநத்தம் ஊருக்கு அழைத்து செல்கிறது.

இங்கிருந்து மலையின் அடிவாரம் ஒரு கிலோமீட்டர் தான்.  மாற்றுப் பாதைகள் இருப்பினும், இந்த சாலை பயணத்திற்கு சிறப்பானதாக உள்ளது.

First View of the Hill

தொலைவில் இருந்தே பாறை தூண் போல நேராக எழுந்திருக்கும் இந்த மலையின் தோற்றம், நமக்கு வியப்பையும், ஆர்வத்தையும் தூண்டுகிறது. 

பச்சை நிறத்தில் சாயம் அடிக்கப்பட்டுள்ள இரும்புக் கைப்பிடிகளும், விழா நாட்களில், மக்கள் திரள் அதை பயன்படுத்தி மலையில் ஏறுவதும், நமது ஆன்மீகப் பயணத்தை, மேலும் ஆர்வமூட்டுவதாக அமைகிறது.

The 31 Steps Story

மலையின் அடிவாரத்தில் 31 படிகள் மட்டும் பாறையில் முழுமையாக செதுக்கப்பட்டுள்ளது.  கூடுதலாக, அரைப்படி ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளதை காணலாம்.

பொதுவாக, இந்த படிகளை யாரும் பயன்படுத்துவதில்லை. படிகளை ஏன் நம்பிக்கையாளர்கள் பயன்படுத்துவதில்லை?.  இதற்கு பதிலாக,  

ஒரு வியப்பான கதை உள்ளது…!

“ஒருவர் படிகள் செதுக்க ஆரம்பித்தபோது 31 படிகள் முடிந்ததும், அவருக்கு முன்னால் சிவபெருமான் தோன்றி  ‘இங்கே வருபவர்களை நான் காப்பாற்றுவேன்… இதற்கு மேல் படிகள் செதுக்க வேண்டாம்’" என்று கூறியதாக கூறப்படுகிறது.

அதையும் மீறி அவர் தொடர்ந்து 32 வது படி செதுக்க முயன்றபோது, அவருக்கு ரத்த வாந்தி எடுத்து மயங்கியதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.  அதனால் தான் அந்த கூடுதலான அரைப்படி!.

The Climb Begins

தரையிலிருந்து சுமார் 700 அடி உயரம் கொண்டது இந்த மலை.

மலை உச்சியில் உள்ள சிவாலயத்தை அடைய சுமார் ஆயிரத்து ஐந்நூறு அடிகள் நாம் எடுத்து வைக்க வேண்டி இருக்கிறது.

பெரும்பாலும் செங்குத்தான பாறையாக இருக்கிறது. சில இடங்களில், நெட்டுக்குத்தாக இருக்கிறது.

அப்போது இரும்புக் கைப்பிடிகளைப் பிடித்து உங்கள் உடலை மேலே இழுத்து ஏற வேண்டும்.

Spiritual Trekking Experience

இது வழக்கமான மலையேற்றமல்ல.  இதை கிட்டத்தட்ட "Cliff Claimbing" என்று சற்று மிகைப்படுத்திக் கூறிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு அடியும் ஒரு ஆன்மீக அனுபவம்… மேலே ஏற ஏற பிரமிப்பும், மகிழ்ச்சியும்!.

First Sight of the Temple

வியப்பான ஒன்று என்னவென்றால், மலையின் உச்சியை அடையும் வரை சிவாலயம் நமது கண் முன்னால் தோன்றாது.

மேலே சென்றபின் தான் பாறைகளின் நடுவில் அமைந்துள்ள இந்த எளிய ஆலயம் நம்மை வரவேற்கிறது.

Inside the Cave Temple

இந்த ஆலயம் ஒரு குகை ஆலயம் போல.

பாறைகளின் நடுவில் அமைதியாக நிற்கும் சிவலிங்கம்…

இங்கே சில நிமிடங்கள் அமர்ந்தாலே, மனதை ஒருங்கிணைக்க ஏற்ற ஒரு வியப்பான அமைதி, உள்ளத்தை நிரப்புகிறது.

Unique Ritual

இங்கே நடைபெறும் ஒரு தனித்துவமான வழிபாடு உள்ளது.

நாமக்கட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து விபூதியுடன் கலந்து பக்தர்களின் நெற்றியில் நாமம் இட்டுக் கொடுப்பது.

ஓசூர் சுற்றுவட்டாரத்தில் ஓரிரு ஆலயங்களில் மட்டுமே இந்த பழக்கம் இன்று வரை உள்ளது.

View from the Top

மலையின் உச்சியில் இருந்து ஓசூர் காடுகளின் அழகைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.

எருது கொம்புகளைப் போல வானத்தை நோக்கி உயர்ந்த பாறைகள்…

பச்சை கிளிகள் காற்றில் பறக்கும் காட்சி…

இயற்கையின் ஒரு அரிய கலைப் படைப்பு.

Prasadam

பகல் பன்னிரண்டு மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

அவல்… பழங்கள்… உலர் பழங்கள்… அதன் ஆன்மிக சுவை மிக பெரியது.

The END

சாகசம்… ஆன்மிகம்… இயற்கை…

இந்த மூன்றும் ஒரே இடத்தில் சந்திக்கும் அற்புதமான இடம் பேவநத்தம் மலை.

ஒருமுறை வந்தால் மீண்டும் வர வேண்டும் என்று உள்ளம் சொல்லும் இடம்.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: