புது டில்லி அருகே உள்ள ஊர் புறத்தில் கால் பந்து அளவிலான விண்கல் ஒன்று விழந்ததில் நெல் வயலில் 4 அடிக்கு ஆழமான பள்ளம் ஒன்று ஏற்பட்டது
ஊர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அறிவன் கிழமை பிற்பகலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த உழவர்கள் வின்னில் இருந்து உருண்டை வடிவமாக கொதிக்கும் சாக்லேட் போல ஒன்று புகை கக்கியபடி வேகமாக தரையில் வந்து விழுந்ததை கண்டனர்.
தரையில் விழுந்த அந்த பெரும் உருண்டை சாக்லேட் பெரும் சத்தத்தை ஏற்படுத்தியதால், உழவர்கள் தத்தமது வேலைகளை அப்படியே விட்டுவிட்டு, சாக்லேட் விழுந்த இடம் நோக்கி ஓடினர்.
ஆழத்தில் புதைந்த நிலையில் கால் பந்து அளவிலான கல் விழுந்து கிடப்பதையும் அதனால் சுமார் நாண்கு அடி பள்ளம் ஏற்பட்டுள்ளதையும் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
ஊர் மக்கள் உடனடியாக காவல் துறைக்கும், அரசு துறைகளுக்கு வின்னில் இருந்து விழுந்த கல் தொடர்பாக தகவல் கொடுத்தனர்.
அரசு அலுவலர்களும், அறிவியலாளர்களும் வந்து அந்த கல்லை ஊர் மக்களிடம் இருந்து மீட்டு சென்றனர்.
ஊர் மக்கள் இந்த கல் குறித்து கூறும் பொழுது "அந்த கல் சுமார் 15 கிலோ எடை இருக்கும். பார்ப்பதற்கு பெரிய அளவிலான கால் பந்து போல உருண்டையாக இருந்தது. அதை நகர்த்தி பார்த்தோம். நம் புவியில் உள்ள பொருள் போல அது இல்லை"
கண்டெடுக்கப்பட்ட அந்த விண்கல்லை அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்











