ஒருவருக்கு முதலீடு தேவை உள்ளது அல்லது சிறு பணம் முடக்கம் உள்ளது என்றால், கைமாத்தாக பணம் பெற யாரிடமும் கை ஏந்தாமல், தங்களது உறவினர்களை "மொய் விருந்து" என அழைத்து அவர்களிடம் பணம் ஈட்டிக்கொள்வர்.
பின்னொரு நாளில், விருந்தில் பங்கெடுத்தவர் வீட்டு விழாக்களுக்கு செல்லும் பொழுத்து அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி "மொய்" என்ற பெயரில் கொடுத்து விடுவர்.
எளிதாக சொல்வதானால் வட்டியில்லா கடன்.
மதுரை உசிலம்பட்டியில் மொய் விருந்து என்று ஒரு சடங்கு வைத்து, மொய் பணம் ஈட்டுவது வழக்கம்.
அத்தகைய வழக்கு தற்பொழுது தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக் குடி தாலுகாக்களில் குறிப்பிட்ட பகுதியில் ஆண்டுதோறும் சூன் முதல் ஆகஸ்ட் திங்கள் வரை மொய் விருந்து நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், வடகாட்டில் டி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏற்பாடு செய்திருந்த மொய் விருந்து விழா நேற்று நடைபெற்றது. இவர், உள்ளூரில் ஃபிளக்ஸ் அச்சு தொழில் செய்து வருகிறார்.
இந்த ஆண்டில் இதுவரை தனி நபர் வேறு யாரும் ஈட்டாத அளவுக்கு ரூ.4 கோடி மொய் தொகை இவருக்கு ஈண்டது.
விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்தலில் 14 இடங்களில் மொய் எழுதும் பணி நடைபெற்றது. மொய் செய்தவர்களுக்காக ரூ.10 லட்சம் செலவில் 1 டன் ஆட்டுக் கறியுடன் சுவையான விருந்து பரிமாறப்பட்டது.
மொய் விருந்து நடைபெற்ற பந்தலில், மொய் பணத்தை இயந்திரம் மூலம் எண்ணி சரிபார்க்கும் பணி கல்லாலங்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியிடம் ஒப்படைக் கப்பட்டது.
விருந்து நடைபெற்ற பகுதியில் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்கள் 5 பேர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர, விருந்து நடைபெற்ற பந்தல் பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிர மாக கண்காணிக்கப்பட்டது.
ஒரு களவானி:
இந்நிலையில் இரவு மின் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து தனது வீட்டுக்குள் இருந்து கிருட்டிணமூர்த்தி வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் ஓடியுள்ளார். உடனே கிருஷ்ணமூர்த்தி கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் திரண்டு, டார்ச் ஒளி கொண்டு தேடியுள்ளனர்.
அப்போது, வீட்டின் அருகே சோளக் காட்டுக்குள் அணவயல் ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சிவனேசன்(24) பதுங்கியிருந்துள்ளார்.
இவரைப் பிடித்து வனவியதில் கிருட்டிணமூர்த்தியின் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சிவனேசனை சிறிது கவணித்து வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை கைது செய்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.











