மின் உற்பத்தி வருவாய் பாதிப்பை ஏற்படுத்தும் இயற்கை
நடுவன் மின்சாரத்துறை அமைச்சகத்தை பொருத்தவரை, மின் உற்பத்தி செய்யும் அமைப்புகள் கொண்ட அணைக்கட்டுகள், இயற்கையை பாதுகாப்பதற்காக தொடர்ந்து திறந்துவிடப்படும் தண்ணீரினால், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது, அதனால் சட்டதிட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு, அணைக்கட்டுகள் மின் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது.
மலைகள், ஆறுகள் மற்றும் அது சார்ந்து வாழும் உயிரினங்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமாயின், ஆற்றின் நீரோட்டம் எப்பொழுதும் ஓரளவிற்கேனும் இயற்கையான நீரோட்டத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.
இதற்காக மின் உற்பத்தி அமைப்புகள் கொண்ட அணைக்கட்டுகள், நீரை தொடர்ந்து வெளியேற்றி வரவேண்டுமென சட்டங்கள் அவற்றை கட்டுப்படுத்துகின்றன.
இத்தகைய சட்டங்களை மின் உற்பத்தி நிலையங்கள் தான், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தேறிய உத்தரகாண்ட், பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட பெரு விபத்து.
பேர் விபத்து நடந்து பல உயிர்கள் பலியாகி சில நாட்களே கடந்துள்ள நிலையில், நடுவன் மின்உற்பத்தி அமைச்சகம், இயற்கையை பாதுகாக்க உள்ள சட்ட திட்டங்கள் அகற்றப்படவேண்டும், மின் உற்பத்தி வருவாயைப் பெருக்குதல் மட்டுமே முதன்மையாக விளங்க வேண்டும் என்கிற கருத்தை வெளிப்படையாக வெளியிட்டுள்ளது.
அறிவியலாளர்கள், இயற்கை மீது பற்று கொண்டோர், பேரழிவை ஆய்வுசெய்த அமைப்பினர், என அனைவரும் நடுவண் அரசையும், உத்தரகாண்ட் மாநில அரசின் நடவடிக்கைகளும் குற்றம்சாட்டியுள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டு, மின் உற்பத்திக்காக அணைக்கட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்தும்போது, இயற்கையை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதே இந்த பேர் விபத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்பதாகும்.
முதன்மை அமைச்சராக மோடி பொறுப்பேற்றது முதல், இயற்கையை பாதுகாக்கும் சட்ட திட்டங்கள் பலவற்றில் விடப்பட்டு, இயற்கைக்கு எதிரான செயல்கள் ஊக்குவிக்கப் படுவதாக தன்னார்வலர்கள் பலர் கருதுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, 2018ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில், கங்கை ஆற்றின் நீரோட்டத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நீரோட்டத்திற்கு, மோடி அரசினால் மாற்றியமைக்கப்பட்ட, சட்ட திட்டங்களால் தான், உத்தரகாண்ட் பேரழிவு ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.
அந்த சட்ட மாற்றத்தின் படி, கங்கை ஆற்றின் குறுக்கே மின் உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ள அணைகளிலிருந்து, குறிப்பிட்ட அளவு நீர் வெளியிட்டால் போதும்.
ஆனால் இயற்கை சூழல் பாதுகாப்பு சட்ட முறைகளின்படி குறைந்தது, உள் வருகின்ற நீரில் 50 விழுக்காடு அளவிற்காவது நீர் வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கங்கை ஆற்றின் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்படும்.
"இந்துக்களின் புனித ஆறு" என கருதப்படும் கங்கை ஆற்றுக்கே இக்கேடு என்றால், பிற ஆறுகளின் நிலை என்னவாக இருக்கும்?
நடுவண் மின்சார துறை அமைச்சகம், திட்டவட்டமான கோரிக்கை ஒன்றை இப்பொழுது முன்வைக்கிறது. அதன்படி ஏற்கனவே இருக்கின்ற மின் உற்பத்தி சார்ந்த அணைக்கட்டுகள் மேலும் புதிதாக அமைக்கப்பட இருக்கின்ற நீர் மின்உற்பத்தி கட்டுமானங்கள், வருவாய் ஈட்டும் வகையில் அமைக்கப்படவேண்டுமேயானால் இயற்கையை பாதுகாக்கும் சட்ட திட்டங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு அவருக்குமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பது.
அந்த நீர் வெளியேற்ற சட்டம், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சட்டம் ஆக்கப்படவில்லை. அதற்கு மாறாக, "தொடர்ந்து நீர் வெளியேற்றம், தொடர்ந்து ஆற்றில் படியும் மாசுகளை அகற்றி செல்லும்" என்பதற்காக மட்டுமே.
நடுவன் அரசின் சிந்தனை, வருவாய் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்டிராமல், இயற்கையையும் அதை சார்ந்து வாழும் மனிதன் மற்றும் பிற உயிர்களையும் காப்பதாக இருக்க வேண்டும் என்பதே அறிவியலாளர்கள் மற்றும் அறிவு சார்ந்த இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.











