மூக்கு சப்பையாக கொண்ட நாய் இனங்களை செல்லமாக வளர்ப்பவர்கள், இந்த கோடை நாட்களில் அவற்றை குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும். கூடுதலான கவனம் எடுத்துக் கொள்ளுதல் தேவை.
நிழற்பாங்கான இடங்களில் மட்டும் உங்கள் செல்ல நாயை நடக்க விடுங்கள். எந்த ஒரு நிலையிலும், சூடான தரைகளில் நடமாட விடக்கூடாது. போதிய தூய்மையான குடிநீர் எப்பொழுதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக மூக்கு சப்பையாக கொண்ட நாய் இனங்கள் இந்த கோடை நாட்களில் மூச்சு விட சற்று திணறும். முடி அடர்த்தியாக உள்ள நாய்களுக்கு முடியை வெட்ட வேண்டும் என்கிற தேவை இல்லை. வயிற்றின் அடிப்பகுதியில் குமிழ்கள் தோன்றினால், கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது என்பதற்கு வெளிப்பாடு. கால்களின் அடிப்பகுதியில் வெடிப்புகள் தோன்றுகிறதா என கவனித்து வாருங்கள். பாதிப்புகள் ஏதாவது இருப்பின் கண்டிப்பாக மருத்துவர் உதவியை உடனடியாக நாடுங்கள்.
கடுமையான நடைபயிற்சி, ஓடியாடி விளையாடுதல் போன்றவற்றை நாய் -க்கு தவிர்த்து விடுங்கள். வாய்ப்பு இருந்தால் தண்ணீர் தொட்டியில் விளையாட விடுங்கள். உணவு உட்கொள்ள மறுக்கிறது என்றால், ஊட்டிவிட தயங்காதீர்கள்.
கோடை நாட்களில் பூச்சிக்கடி தொல்லை இருக்கும். படுத்து உறங்கும் பொழுது, பூச்சிகள் அண்டாது கவனித்துக் கொள்ளுங்கள்.
Siberian Husky, Alaskan Malamute, Bernese Mountain Dog, Pugs, Shih Tzus போன்ற நாய் இனங்களை வீட்டில் வளர்ப்பவர்கள், அவற்றுக்காக, அவை படுத்துறங்கும் இடங்களில் AC பொருத்துவது தேவை.











