சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித முகம் போன்ற அமைப்பு கொண்ட சுடுமண் சிற்பம் கடந்தனாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்களின் தொடர் முயற்சியினாலும், அவரின் வற்புறுத்தலினாலும், 2021 சூன் 13-ம் நாள் முதல், திருப்புவனம் அருகே கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் கீழடி அருகே உள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய ஊர் பகுதிகளிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு, அப்பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கீழடி அகழாய்வில் பலனிறம் கொண்ட பாசி மணிகள், பானை ஓடுகள், கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்தனாள் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய ஊழி தமிழா்கள் பயன்படுத்திய மனித முகம் போன்ற உருவம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.











